பிறந்தாய் வாழி பாரதி

4 (80%) 1 vote

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவ தெங்குங் காணோம்
பாமரராய், விலங்குகளாய், உலகனைத்தும்
இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு
நாமமது தமிழரெனக் கொண்டிங்கு
வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்?

தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும் வகை செய்தல் வேண்டும !

பாரதிப்பிறந்த இந்த நாளில் , பாரதியின் பல்வேறு முகங்களில் அவர் பெரிதும் நேசித்த தமிழ் மொழி பற்றிய அவரின் அவா ஆன தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும் வகை செய்தல் வேண்டும என்பதை நிறைவேற்ற உறுதிகொள்வோம் .
யாமறிந்த மொழிகளில் என்கிறாரே அவருக்கு எத்தனை மொழி தெரிந்திருக்கும் ? இதுயாவர்க்கும் எழும் ஐயம் தான். ..தனது 16 வயத்தில் தந்தையை இழந்த பாரதி அரும்பாடுபட்டு காசிக்கு சென்றார் அங்கு அலகாபாத் பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதம் இந்தி பயின்றார் .அத்துடன் ஆங்கிலம் ,வங்காளம் ஆகிய மொழியிலும்
புலமை பெற்றிருந்தார் எனவே அவர் யாமறிந்த மொழிகளிலே என்றுக்கூற வல்லமை பெற்றிருந்தார் .என்பதில் ஐயம் இல்லை !
-அண்ணாமலை சுகுமாரன்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*