ஜோசியம்

பிறப்பிற்கு முன்னே தீர்மானிக்கப்படும் தலையெழுத்து

Rate this post
  1. உலகில் அனைத்து ஜீவராசிகளுக்கும் பொதுவான ஒரே அம்சம் எதுவென்றால் ,ஜனனத்தின் போதே ,தீர்மானிக்கப்பட்ட நமது தலையெழுத்தெனும் விதி தான்.

தாங்கள் குறிப்பிட்டது போல,மனிதனுக்கு உண்டாகும் அனைத்து வகையான துன்பம் தரும் நிகழ்வுகளும், அதாவது விபத்து,நோய்,இன்னல்,இழப்பு போன்ற அனைத்துமே ,நமது செயல்களினால் உருவான கர்மவினைப் பயன்கள் தான் என்று சித்தரும்,ஞானியரும் குறிப்பிடுகின்றனர்.

முற்பிறப்பில் செய்த வினைகளுக்கான பயன் அனுபவித்தது போக,எஞ்சியுள்ளவை,இப்பிறவியிலும் தொடரும்.இந்த கர்மாவுக்கு ‘பிராரப்த கர்மா ‘ என்று பெயர்.இதை அனுபவித்துத் தான் தீர வேண்டும்.

முற்பிறப்பில் செய்த வினைப் பயன்களின் தொகுதி ‘சஞ்சித கர்மா’ எனப்படும்.இதை மாற்ற முடியாது.ஆனால் ஞானத்தால் அழிக்கக் கூடியது.

இந்த வாழ்வில் நாம் செய்யும்,செய்யப் போகும் வினைகளுக்கான கர்மா ‘ஆகாமிய கர்மா’ எனப்படும்.

இப்படி முக்கர்மாக்களின் பயனால் தான் நமக்குத் துன்பம் விளைகிறது என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து,இன்னல் வரும் வேளையில்,நமது செயலுக்கான பலன் இது என்று ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொண்டால் துன்பத்தின் காயங்களும்,அதுஏற்படுத்திய வடுக்களும் நம்மை ஒன்றும் செய்துவிட இயலாது.

நமது நிகழ்காலச் செயல்கள் தூய்மையாய் அமையும் பட்சத்தில்
சஞ்சித,ஆகாமிய கர்மாவின் பயன்களை ஞானத்தால் ஒழித்து விடலாம்.

அதற்கு தைரியம் எனும் மனஉறுதியும்,அது கனிகின்ற வரை மனம் தளராத பொறுமையும் மிகவும் அவசியமாகும்.
பிராரப்த கர்மாவின் பயன்களை,நமது நிகழ்காலச் சங்கல்பத்தாலும்,செயலாலும் மாற்ற முடியாது என்பதல்ல;

இத்தகைய விதியை ஆன்மிக உயர்நிலையை அடைந்தவர்களால் மாற்ற இயலும்.
உத்கடகர்மா எனும் கொடியவினைப்பயனை மாற்றுவது கடினம்.

ஆன்மிக நிலையை அடையும் போதுபிரபஞசமளாவிய தெய்வ சங்கல்பத்துடன் ஒன்றி விடும் திறன் வருகிறது.தான் படைத்தவற்றை மாற்றும் ஆற்றல் அந்தச் சங்கல்பத்திற்கு உண்டு.கர்மத்தின் குறுகிய,இறுகிய தன்மையைத் தளர்த்தி,விரிவான சுதந்திரத்தை அதனால் ஏற்படுத்த முடியும்.

ஆக ஒவ்வொரு மனிதனும் தன் நன்மையைக் கருதியேனும் ,பிறருக்குத் தீங்கிழைக்காமலும்,கொடுஞ்செயல்கள் செய்யாமலும்
இருக்க வேண்டியது அவசியமாகிறது.

எனவே தான் ,நம்முடைய செயலால் உருவான வினைப்பயன்களை நாம்
தான் அனுபவிக்க வேண்டும்.

கர்மாவின் தீவிரத்தைக் குறைக்க, தர்மாவினால் (தர்ம காரியங்கள் , கூட்டு பிராத்தனைகள் ) நற்செயல்கள் புரிந்து நாளும்,இறையையே நினைந்து, மனஉறுதியோடு பொறுமைகாத்தோமென்றால்,அவைகளே நமக்கு அரணாக நின்று காக்கும்.

நன்றி
வாழ்க வளமுடன்

Comment here