ஆன்மிகம்

புகழ் பெற்ற ஸ்ரீ சனீஸ்வர பகவான் கோவில் கும்பாபிஷேகம். பக்தர்கள் சாமி தரிசனம்:-

5 (100%) 1 vote

புதுச்சேரி மாநிலம் காரைக்காலை அடுத்த திருநள்ளாற்றில் உலக புகழ் பெற்ற ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் ஸ்ரீ சனீஸ்வர பகவான் தேவஸ்தானம் அமைந்துள்ளது. இங்கு சனீஸ்வர பகவான் அனுக்கிரக மூர்த்தியாக இருப்பதால் சனிதோஷம் நீங்க வேண்டி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு வந்து வழிபட்டு செல்கின்றனர். புகழ்பெற்ற இக்கோயிலின் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.

இந்த கும்பாபிஷேகத்தை ஒட்டி கோயிலின் திருப்பணிகள் கடந்த இரண்டு 8 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு நடைபெற்று வந்தது. கோயிலை சுத்தம் செய்தல் கோபுரங்களுக்கு வர்ணம் தீட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வந்தன இதேபோல கோவில் சன்னதியில் சோழர்களின் கட்டிடக்கலை மாறாமல் கோயில் புதுப்பிக்கப்பட்டு சிலைகள் பழங்கால முறைப்படி பொருத்தப்பட்டன கோயிலின் திருப்பணிகள் நடைபெற்று முடிந்த நிலையில் கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை பூஜைகள் கடந்த 7ஆம் தேதி அன்று தொடங்கியது 72 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில் சனீஸ்வரபகவான் தர்ப்பாரண்யேஸ்வரர் மற்றும் பிரணாம்பிகை உள்ளிட்ட பிரதான தெய்வங்களுக்கு நவ யாககுண்டங்கள் அமைக்கப்பட்டு யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்ததன. இதைத்தொடர்ந்து 8ம் கால யாகபூஜை இன்று காலை 4.30 மணிக்கு நிறைவடைந்தது இதையடுத்து மேளதாள வாத்தியங்களுடன் கட புறப்பாடு நடைபெற்றது. யாகத்தில் வைக்கப்பட்டு பூஜை செய்த புனித நீர் கலசங்களை சிவாச்சாரியர்கள் தலையில் சுமந்து பிரகாரம் சுற்றி வந்து பின்னர் கோபுர கலசங்களுக்கு கொண்டு சென்றனர்.

இதை தொடர்ந்து கோபுர கலசங்க ஸ்க்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். புகழ்பெற்ற திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் நடைபெற்றுள்ள இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியை தொடர்ந்து சனீஸ்வர பகவான் மேஷ ராசி முதல் மீன ராசி வரை அனைத்து ராசிக்காரர்களுக்கும் நற்பயன்களை வழங்குவார் என்று ஜோதிடர்கள் தெரிவித்துள்ளனர். கும்பாபிஷேகத்தையொட்டி ஏராளமான பக்தர்கள் திருநள்ளாறு வந்து குவிந்துள்ளதால் அவர்களுக்கான அடிப்படை வசதிகளை தேவஸ்தான நிர்வாகம் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செய்துள்ளது. பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இன்று ஒருநாள் காரைக்கால் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Comment here