அரசியல்

புதிதாக அமையும் மத்திய அரசில் அ.தி.மு.க.வின் பங்கு இருக்கும் – அமைச்சர் ஜெயக்குமார்

Rate this post
சென்னை :  சென்னையில் சிந்தனை சிற்பி சிங்காரவேலர் 160-வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. இதன் பிறகு நிருபர்களுக்கு பேட்டி அளித்த  அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-
அ.தி.மு.க. யானை பலத்துடன் கூடிய கூட்டணியை அமைக்கும், புதிதாக அமையும் மத்திய அரசில் அ.தி.மு.க.வின் பங்கு நிச்சயமாக இருக்கும். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குறித்து கமல் விமர்சித்திருப்பது சரியானது தான் என கூறினார்.
கமலுக்கு அ.தி.மு.க. கூட்டணியில் இடம் அளிக்கப்படுமா? என்ற நிருபரின்  கேள்விக்கு பதில் அளித்த ஜெயக்குமார், அரசியலில் எதுவும் நடக்கலாம். தி.மு.க., அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்  மட்டுமே அரசியலில் அ.தி.மு.க.விற்கு எதிரி என கூறினார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் சுப்ரீம் கோர்ட்  தீர்ப்பு குறித்து  அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-
“தமிழக அரசின் வலுவான வாதத்தை ஏற்று, சுப்ரீம் கோர்ட்  வழங்கியுள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்கது . அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து தீர்ப்பின் நகல் கிடைத்த பின் ஆலோசிக்கப்படும். ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது மூடப்பட்டது தான், தமிழக அரசு பின்வாங்காது” என கூறினார்.

Comment here