உலகம்

புதினிடம் கிண்டலாக தெரிவித்த டொனால்டு டிரம்ப்

ஜப்பானில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ரஷிய அதிபர் புதின் இடையே சந்திப்பு இன்று நடைபெற்றது. இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்கிடையே வரும் தேர்தலில் ரஷ்யா தலையிட வேண்டாம் என்று கண்டிப்பீர்களா? என்று டொனால்டு டிரம்பிடம் செய்தியாளர் ஒருவர் கேள்வியை எழுப்பினார். அதற்கு கிண்டலாக பதில் கூறிய டொனால்டு டிரம்ப், புதினை நோக்கி, “பிளிஸ்.. தேர்தலில் தலையிடாதீர்கள்” என்று கூறியுள்ளார். 2016 அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் ஹிலாரி கிளிண்டனை தோற்கடித்து குடியரசு கட்சியின் டொனால்டு டிரம்ப் வெற்றிப்பெற்றார். இத்தேர்தலில் ரஷியாவின் தலையீடு இருந்ததாக தொடர்ந்து குற்றம் சாட்டப்படுகிறது. அடுத்த வருடம் நவம்பர் மாதம் அமெரிக்க அதிபருக்கான தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Comment here