இல்லறம்

புதுசா கல்யாணம் ஆன கணவன் மனைவி இடையே ஒரு ஒப்பந்தம்”…..!!

Rate this post

இன்று ஒரு நாள் மட்டும்….,

“யார் வந்தாலும் கதவை திறக்க கூடாது என்று முடிவெடுத்தனர்”……!!

அன்றே.., ” கணவனுடைய அம்மா அப்பா வந்தனர் “…..!!

இருவரும் அவர்கள் வருவதை…,

“ஜன்னல் வழியாக பார்த்துவிட்டனர்”……!!

இருவரும் ஓருவரை ஓருவர் பார்த்து கொண்டனர்…..!!

“கணவனுக்கு கதவை திறக்க வேண்டும் என்ற ஆசை”……!!

ஆனால் ,
“ஒப்பந்தம் போட்டு விட்டதால்”….,

“அதை மீற மனமின்றி கதவை திறக்க வில்லை அவன்”…….!!

அவர்கள் வீட்டில் யாரும் இல்லை என்று நினைத்து…..,

” திரும்பி போய் விட்டனர்”……!!

கொஞ்ச நேரம் கழித்து….. ,

“மனைவியின் அம்மா அப்பா வந்தனர்”…..!!

கதவை தட்டினார்கள்….!!

” இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்”…..!!

ஆனால்,

” மனைவிக்கு கண்கள் கண்ணீரால் குளமானது”…….!!

” என்னால் கதவை திறக்காமல் இருக்கமுடியாது ” …..,

என்று சொல்லி கதவை திறந்தாள்.

ஆனால் ,
“கணவன் ஒன்றும் சொல்ல வில்லை”……!!

வருஷங்கள் உருண்டோடின….!

“இரண்டு ஆண் குழந்தை பிறந்தது”….!!

மூன்றாவதாக….,

“பெண் குழந்தை பிறந்தது”……!!

கணவன்…,
” பெண் குழந்தை பிறந்த சந்தோஷத்தில்”…… ,

பெரிய அளவில் செலவு செய்து…..,

” அனைவருக்கும் பார்ட்டி கொடுத்து கொண்டாடினான்”…….!!

அதற்கு மனைவி ,

“இரண்டு ஆண் குழந்தை பிறந்த போது”……,

” இவ்வளவு பெரிய அளவில் கொண்டாட வில்லை”…….!!

” பெண் குழந்தை பிறந்தவுடன்”….,

” இவ்வளவு பெரிய பார்ட்டி கொடுக்கிறீங்களே ஏன்”……?
என்று கேட்டாள் …..!!

அதற்கு கணவன்….,

” ரொம்ப நிதானமாக சொன்னான்”……

எதிர்காலத்தில்…..,

” எனக்காக கதவை திறக்க”…….,

” ஓரு பெண் பிறந்துவிட்டாள் “….!!

என்றான் கர்வத்துடன்….!!!
பெண்களை பெற்ற அனைவருக்கும் சமர்ப்பணம்

Comment here