தமிழகம்

புத்தக கண்காட்சி -தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜய பாஸ்கர்

கரூரில் 3-வது புத்தக கண்காட்சி

கரூர் கோவை ரோட்டில் அமைந்துள்ள கொங்கு திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

ஜூலை 28-வரை நடைபெறவுள்ள இந்த புத்தக திருவிழாவை தமிழ்நாடு அறிவியல் இயக்கம், பாரதி புத்தகாலயம், தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை இணைந்து நடத்துகிறது.

புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு 2 மாதங்களுக்கு முன்பே புத்தகம் சேமிப்பு உண்டியல் கொடுக்கப்பட்டு அதில் சேமிக்கும் தொகைக்கு 15 சதவீதம் கழிவு விலையில் புத்தகங்கள் வாங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த 10,000 உண்டியல்களை தமிழ்நாடு காகித ஆலை நிறுவனம் வழங்கியுள்ளது. அது மட்டுமின்றி, தனியார் பள்ளி அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு திறனறிதல் தேர்வு நடத்தப்பட்டது.

மேலும், கல்லூரி மாணவ மாணவிகளுக்கு கரூர் அரசு கலைக்கல்லூரியில் திறனறிதல் தேர்வு நடத்தப்பட்டு, அவர்களுக்கு கரூர் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில், கேடயம் மற்றும் புத்தகங்கள் வழங்கப்பட உள்ளது.

இதில் பங்கு பெற்ற சுமார் 30 ஆயிரம் மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜய பாஸ்கர் கலந்துகொண்டு திறனாய்வு போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் பரிசுகளையும் வழங்கினார்.

இந்த புத்தக திருவிழாவில் ஒவ்வொரு நாளும் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் 10 மாணவர்களுக்கு ரூபாய் 500 வீதமும், கலை நிகழ்ச்சியில் பங்கு பெறும் மாணவர்களுக்கு 5000 மதிப்பிலான புத்தகங்களும் பரிசளிக்கப்படுகிறது. இந்தாண்டு புத்தகத்

திருவிழாவில் சிறப்பம்சமாக கோளரங்கம் மற்றும் சுமார் 60 அரங்குகளில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்படவுள்ளன.

தினமும் மாலை நேரங்களில் கலை நிகழ்ச்சிகளும், தலை சிறந்த பேச்சாளர்களும் கலந்துகொண்டு விழாவை சிறப்பிக்க உள்ளனர்.

விழா குழுவின் கெளரவ தலைவர் திரு.தங்கராசு, தலைவர் திரு.சங்கர், செயலாளர் திரு.ஜான்பாஷா, இணைச்செயலாளர் திரு.காமராஜ், பொருளாளர் திரு.சுப்ரமணியன் மற்றும் அமைப்பாளர்கள் விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளனர்.

Comment here