பொது

புத்திசாலியாய் இருங்கள்… முட்டாளாய் நடியுங்கள்….

🙏வாழ்க்கை ஒரு நிமிஷத்தில் மாறுமா என்று தெரியவில்லை. ஆனால் ஒரு நிமிடத்தில் எடுக்கும் முடிவுதான் வாழ்க்கையையே மாற்றி விடும்….

🙏வாழ்கையை வெறுக்க ஆயிரம் காரணங்கள் இருந்தாலும், வாழ்வதற்கு ஒரே காரணம்…. ” நாளை எல்லாம் சரியாகிவிடும்” என்ற நம்பிக்கை தான்.
எல்லாவற்றையும் இறைவன் பார்த்துக்கொள்வார்
என்ற அசைக்கமுடியாத நம்பிக்கைதான்

🙏வாய்க்காலில் நீரோட்டமும், வயலில் ஏரோட்டமும் சிறப்பாக இருந்தால் தான் வீட்டில் கொண்டாட்டமும் நிலையாக இருக்கும்.

🙏 என்னை முட்டாள் என்று கூறினால் வருத்தப்படுவதில்லை. முட்டாள் ஏமாறுவானே தவிர யாரையும் ஏமாற்ற மாட்டான்.

🙏 வாழும் வாழ்க்கை கொஞ்ச நாட்கள்தான்….! ( என்ன ஒரு அதிகபட்சம் 80 வயது எனக் கொள்வோமா / just 29000 நாட்களே….! ) வசதியாய் வாழாவிட்டாலும், பிறர் வாழ்த்தும்படி நிம்மதியாய் வாழ்ந்துவிட்டு போவோமே….!

Comment here