சம்பவம்

புல்வாமா தாக்குதல் உளவுத்துறையின் தோல்வியல்ல

Rate this post

பிப்ரவரி 14-ம் தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை குறிவைத்து கார்வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் 40 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்தனர். இதனையடுத்து பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா தாக்குதலை நடத்தியது. உளவுத்துறை முன்கூட்டியே தகவல் அளித்தும் பாதுகாப்பு படை வீரர்களை வான்வழியாக வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டுக்கள் எழுந்தது. இந்நிலையில் புல்வாமா தாக்குதல் உளவுத்துறையின் தோல்வியல்ல என மத்திய அரசு பதில் அளித்துள்ளது.

மாநிலங்களவை கேள்வியொன்றுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அளித்துள்ள பதிலில், அனைத்து பாதுகாப்பு முகமைகளும் ஒருங்கிணைந்த முறையில் செயல்படுகின்றன. உளவுத்துறையின் உள்ளீடுகள் பல்வேறு நிறுவனங்களிடையே நிகழ்நேர அடிப்படையில் பகிரப்படுகின்றன. ஜம்மு-காஷ்மீர் கடந்த 30 ஆண்டுகளாக பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. எல்லை தாண்டிய நிதியுதவியால் பயங்கரவாதம் ஆதரிக்கப்படுகிறது. இருப்பினும், பயங்கரவாதத்தின் மீதான சகிப்புத்தன்மையற்ற கொள்கை மற்றும் பாதுகாப்பு படையினரால் தொடர்ச்சியான நடவடிக்கை ஆகியவற்றின் காரணமாக ஏராளமான பயங்கரவாதிகள் கடந்த சில ஆண்டுகளில் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comment here