தமிழகம்

புல்வாமா தாக்குதல்; தமிழக வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது

Rate this post
சென்னை, காஷ்மீரின் புல்வாமாவில் ஜெய்ஷ் இ முகமது இயக்க தீவிரவாதி கடந்த 14ந்தேதி நடத்திய தற்கொலை தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் பலியாகினர்.  இதில் தூத்துக்குடி மாவட்டம் சவலாப்பேரி கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன், அரியலூர் மாவட்டம் கார்குடியை சேர்ந்த சிவசந்திரன் ஆகிய 2 தமிழர்களும் அடங்குவர்.
இதனை தொடர்ந்து தமிழக வீரர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.20 லட்சம்  நிதியுதவி வழங்கப்படும் என முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இரங்கலும் வெளியிட்டார்.
தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர்கள் சிவசந்திரன், சுப்ரமணியன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
இதன்படி புல்வாமா தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு பணி நியமன ஆணைகளை முதல் அமைச்சர் பழனிசாமி வழங்கினார்.

Comment here