பெட்ரோல், டீசல் விலை உச்சம் ; மக்கள் திண்டாட்டம் : காங். இன்று முழு அடைப்பு

Rate this post

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியின் சார்பில் வரும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் மாற்றியமைத்து வருகின்றன. அதன்படி, இந்தியாவில் நாள்தோறும் பெட்ரோல் விலை மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன. இதில், கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும்போது, பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி, கச்சா எண்ணெய் விலை குறையும்போது அதன் பலனை மக்கள் அனுபவிக்க முடியாமல் பல்வேறு வரிகளை மத்திய அரசு சுமத்தியுள்ளது. இதன் காரணமாக, கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயரும்போது, பெட்ரோல், டீசல் விலை புதிய உச்சத்தை தொடுகிறது. இதனால், வாகன உரிமையாளர்களை மட்டுமின்றி சாதாரண பொதுமக்களையும் கடுமையாகப் பாதித்துள்ளது. இந்த விலை உயர்வு வாகன ஓட்டிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. அதாவது, சென்னையில் இன்று (வெள்ளிக்கிழமை) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 83.14 ரூபாய்க்கும், டீசல் 76.18 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான மல்லிகார்ஜூன கார்கே, ரந்தீப் சிங் சுர்ஜேவாலா, அசோக் கெலாட், அகமது படேல், மோதிலால் வோரா ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடக்கும்போது, 2014ம் ஆண்டு சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகமாக இருந்தபோதிலும் ஒரு லிட்டர் 71 ரூபாய் 41 பைசாவும், டீசல் 55 ரூபாய் 49 பைசாவும் இருந்தது. ஆனால், பாஜக ஆட்சியில் கச்சா எண்ணெய் விலை குறைந்த போதிலும் பெட்ரோல் லிட்டருக்கு 83 ரூபாய் 14 பைசாவாகவும், டீசல் விலை 76 ரூபாய் 18 பைசாவாகவும் உயர்ந்துள்ளது. இதனை கண்டித்து, நாடு முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்துகிறது. இந்த போராட்டத்திற்கு திமுக முழு ஆதரவை அளித்துள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*