தொழில்நுட்பம்

பெட்ரோல், டீசல் விலை உயர்கிறது

Rate this post

புதுடெல்லி,

பாராளுமன்றத்தில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று ‘மத்திய பட்ஜெட்’டை தாக்கல் செய்தார். அதில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான சிறப்பு கலால் வரி லிட்டருக்கு ரூ.1 அதிகரிக்கப்படுவதாக அறிவித்தார். இதன் காரணமாக இன்று நள்ளிரவு முதல் நாடு முழுவதும் பெட்ரோல், டீசலுக்கான விலை உயரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.50 காசும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.30 காசும் உயர உள்ளது. உயர்த்தப்பட்ட வரியுடன் உள்ளூர் வரியும் கூடுதலாக இணையும் என்பதால் நாட்டில் வெவ்வேறு இடங்களில் விலையில் மாறுபாடு இருக்கும்.

இந்த விலை உயர்வு இன்று (ஜூலை 5) நள்ளிரவு முதல் உடனடியாக அமலுக்கு வருகிறது. சாலை உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பெட்ரோல், டீசலுக்கு ஒரு லிட்டருக்கு ரூ.2 கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல்- டீசல் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்படுவர்.

Comment here