பெண்களின் இரும்புச் சத்துக்கு வெந்தயம் முக்கியம்

Rate this post

முதன் முதலில் மாதவிடாய் ஏற்படும் பருவத்தில், கர்ப்ப காலத்தில் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு ஏற்படும். இந்நேரத்தில் உங்கள் உணவில் வெந்தய இலைகளை சேர்த்துக் கொண்டால், போதிய அளவிலான இரும்புச்சத்து கிடைக்கும். ஆனால் அதனுடன் உருளைக்கிழங்குகள் அல்லது தக்காளிகளை சேர்த்து கொண்டால் தான் இரும்புச்சத்து உறிஞ்சுதல் மேம்படும். மார்பக பெரிதாக்க தினசரி உணவில் வெந்தயத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும். வெந்தயத்தில் உள்ள ஈஸ்ட்ரோஜென் போன்ற குணங்கள் பெண்களின் ஹார்மோன்களை சமநிலைப்படுத்தி மார்பகங்களை பெரிதாக்க உதவும். உடலின் இரத்த கொழுப்பை குறைக்க உதவும், இதயத் துடிப்பு மற்றும் இரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்த இது உதவும். சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு வெந்தயம் பெரிதும் உதவுகிறது. இயற்கையான கரையத்தக்க நார்ச்சத்து வெந்தயத்தில் உள்ளதால், சர்க்கரையை இரத்தம் உட்கொள்ளும் வீதம் குறையும். வெந்தயத்தில் அமினோ அமிலம் உள்ளதால், இன்சுலின் உற்பத்தியை அது தூண்டிவிடும். செரிமானத்தை ஊக்குவிக்கும் உடலிலுள்ள தீமையான நச்சுக்களை வெளியேற்ற வெந்தயம் உதவுகிறது. இது செரிமானமின்மையை நீக்கி, மலச்சிக்கலுக்கு நிவாரணம் அளிக்கும். நெஞ்செரிச்சலுக்கு தீர்வு உணவில் ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை சேர்த்துக் கொண்டால், அதிகப்படியான அமிலப் பாய்ச்சல் அல்லது நெஞ்செரிச்சலுக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*