அரசியல்

பெண்களுக்கு முப்படைகளிலும் பணி: பரீக்கர்

ராணுவத்தில் முப்படைகளிலும் பெண்களை பணியமர்த்தி சாதித்துக் காட்டுவோம் என மத்திய ராணுவ அமைச்சர் மனோகர் பரீக்கர் நம்பிக்கை தெரிவித்தார்.

டில்லியில் பிக்கி கூட்டமைப்பின் மகளிர் பிரிவினர் நடத்திய மாநாட்டில் கலந்து கொண்ட ராணுவ அமைச்சர் மனோகர் பரீக்கர் பேசியதாவது: நம் நாட்டில், பெண்களை, துர்கையாகவும், ஜான்சி ராணியாகவும் சித்தரித்து பெருமைப்படுத்துகிறோம். ஆனால், குறிப்பிட்ட துறைகளில் அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல் ஒதுக்கி வைக்கிறோம். இந்த நிலையில் மாற்றம் ஏற்பட வேண்டும். ராணுவத்தை பொறுத்தவரை, முப்படைகளிலும் பெண்களை பணியமர்த்தி, சாதித்து காட்டுவோம்.

பெண்களால் ஆண்கள் படைப்பிரிவுக்கு தலைமை தாங்க முடியும். ராணுவத்தில் பெண்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிப்பதில் உள்ள ஒரே பிரச்னை உள்கட்டமைப்பு வசதி குறைபாடுகள் தான். முப்படைகளுக்கும் தளபதிகளாக பெண்கள் நியமிக்கப்பட்டு, அவர்களுடன் நான் அமர்ந்திருக்கும் காலம் விரைவில் வரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Comment here