Sliderசமையல்

பெப்பர் ஈரல் வறுவல்.

Rate this post

 

🍱தேவையான பொருட்கள்

🐐ஈரல் 1 கப்

🐐எண்ணெய் தேவைக்கேற்ப

🐐பட்டை 2

🐐லவங்கம் 4

🐐வெங்காயம் 2

🐐குடைமிளகாய் அரை கப்

🐐தக்காளி 2

🐐இஞ்சி, பூண்டு விழுது 2 டீஸ்பூன்

🐐பெப்பர் தேவைக்கேற்ப

🐐கொத்தமல்லித்தழை ஒரு கைப்பிடி

🐐கறிவேப்பிலை ஒரு கொத்து

🐐உப்பு தேவைக்கேற்ப

🐐மஞ்சள்தூள் ஒரு டீஸ்பூன்

*🍴செய்முறை*

🍲முதலில் ஈரலுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேக வைத்து கொள்ளவும்.

🍲கடாயில் எண்ணெய் விட்டு பின் பட்டை, லவங்கம், வெங்காயம், குடைமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.

🍲அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். அதில் தக்காளியை சேர்த்து நன்கு எண்ணெய் மிதக்கும் வரை வதக்கவும்.

🍲பிறகு வேக வைத்த ஈரல் சேர்க்கவும். பெப்பர் காரத்திற்கேற்ப சேர்த்து, கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

🍲சுவையான பெப்பர் ஈரல் ரெடி.

*┈┉┅━❀வசந்தம்❀━┅┉┈​*

Comment here