தொழில்நுட்பம்

பேட்டரி கார்கள் தேவை

Rate this post

பெருகி வரும்  மாசுவை  கட்டுபடுத்தவும் சுற்றுசூழலை பாதுகாக்கவும், எண்ணை இருக்குமதி செலவை குறைக்கவும், மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வாகன தயாரிப்பில் மா ற்றம் தேவை. தற்போது பெட்ரோல், டீசல்  ஆகியவற்றில் இயங்கும் வாகனங்களை மாற்றியமைத்து, பேட்டரியால் இயங்கக்கூடியதாக உருவாக்கப்பட வேண்டும். ஆனால் அதற்குண்டான நடைமுறைகள் எளிதாக  இருக்கவேண்டும். கார்களில் பயன்படுத்தப்படும் பேட்டரி கார்களின் விலையில் நான்கில் ஒரு பங்காக உள்ளது. இவ்வளவு கூடுதலான விலை இருந்தால் அதன் பராமரிப்பிலும் அதிக செலவு பிடிக்கும். இப்படி எரிபொருளுக்காக செலவிடும் தொகை அதிகமாக இருந்தால் மக்கள் அதனை விரும்புவது கடினம். இன்றைய காலகட்டத்தில் நடுத்தர வர்க்கத்தில் நான்கு சக்கர வாகனம் என்பது தேவை மட்டுமல்ல அந்தஸ்தாகவும்சமுகத்தில் பார்க்கபடுகிறது. பெருமளவில் நடுத்தர வர்க்கத்தினர் பயன்படுத்தும் வாகனங்களுக்கு அதை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு  குறைந்த விலையில் விற்பனை செய்ய வாகன தயாரிப்பு நிறுவனங்கள் முன்வரவேண்டும்.

அதற்க்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை அரசும் ஏற்படுத்தி தரவேண்டும். பேட்டரி கார்கள்  தயாரிக்க முக்கிய தேவை பேட்டரி. பேட்டரி பெரும்பாலும் இறக்குமதியை நம்பித்தான் இருக்கின்றன. இதனால் அடிக்கடி பேட்டரிகளை மாற்றிக்கொள்ளும் வசதியும் குறைவு. பேட்டரி சார்ஜ் மையங்களை அமைக்கவேண்டும். அதற்க்கான வாய்ப்புகளும் குறைவு ஏன் என்றால் மின்சாரம் விற்கும் உரிமை சில நிறுவனங்களுக்கு மட்டுமே உண்டு. இந்த  சார்ஜ் மையங்கள் அமைக்கவேண்டும் என்றால் லைசென்ஸ் பெறவேண்டும் இதற்க்கான நடைமுறைகள் ஏராளம்.

அதுமட்டுமல்லாமல் வணிக வளாகங்கள், அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களிலும் சார்ஜ் மையங்கள் அமைக்க முடியாது. பேட்டரி தயாரிப்பு நிறுவனங்கள் ஒரே மாதிரி வடிவங்களிலும், அளவுகளிலும் தயாரிப்பதில்லை. விலையும் காரின் விலையில் 30 – முதல் 40  சதவீதம் வரை உள்ளது. அதிக நேரம் தாக்கு பிடிக்கும் லித்தியம் அயன் பேட்டரிகளை இப்போதுவரை இறக்குமதி செய்து தான் பயன்படுத்துகிறோம். இந்திய நிறுவனங்கள் இத்தகைய பேட்டரிகளை தயாரிக்க இதுவரை  எந்த உறுதியான முடிவுகளும் எடுக்கவில்லை..

பேட்டரி தயாரிப்பில் சில நிறுவனங்கள் ஆர்வம் தெரிவித்தாலும் அதை நடைமுறைபடுத்த தயங்குகின்றன. தற்போது இந்தியாவில் தயாரிக்கப்படும் பேட்டரிகள் சார்ஜ் செய்ய  8 – 10  மணிநேரம் பிடிக்கிறது. இவ்வளவு நேரம் சார்ஜ் செய்ய இயலாது. சூரிய மின்னாற்றலில் இயங்கும் சார்ஜ் மையங்களை அதிக அளவில் அமைக்க அரசு அவன செய்தால், பேட்டரி வாகனங்கள் அதிக அளவில் பயன் படுதப்படும். சமீபத்தில் டெல்லியில் நடந்த ஆட்டோ எக்ஸ்போ -2018 ல் பல நிறுவனங்கள் தங்கள் எதிகாலத்தில் தங்கள் தயாரிக்கப்பட உள்ள பேட்டரி கார்களை காட்சிப் படுத்தியிருந்தனர். வாடகை கார், சரக்கு வாகனங்களுக்கு பேட்டரி கார் ஒரு வரபிரசாதமாகும். பேட்டரி கார்களின் வரவு அரசின் கொள்கை முடிவில் தான் உள்ளது .

Comment here