ஆன்மிகம்

பையனூரில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த எட்டீஸ்வரர் கோவில்

4/5 - (1 vote)

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சிவன் கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் யாகம் செய்து வாயற்படி சிறப்பு பூஜை.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த பையனூரில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த எட்டீஸ்வரர் கோவில் உள்ளது, இக்கோவிலில் பல ஆண்டுகள் கழித்து திருப்பணி செய்ய பொதுமக்களால் முடிவு செய்து அதற்கான வேலைப்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் கோவிலின் நுழைவாயில் வாசக்கால் அமைக்கும் விழா இன்று நடைபெற்றது கருங்கற்களால் ஆன வாசக்கால் ஆனது சுமார் ஆறு மாத காலமாக சிற்பம் செதுக்கி உருவாக்கப்பட்டது அத்தகைய தூணை இன்று ஊர் பொதுமக்கள் கூடி சித்ரா பௌர்ணமியை முன்னிட்டுசிறப்பு பூஜை மற்றும் யாகம் செய்து கோ பூஜை செய்து ஊர் பொதுமக்கள் சேர்ந்து கிரேன் எந்திரத்தின் உதவியுடன் வாசக்கால் வைக்கப்பட்டது. அதற்கு முன்னதாக யாகம் வளர்த்து பூஜை செய்யப்பட்ட கலச நீரை கொண்டு வாசக்காலில் தெளித்து குங்குமம் மற்றும் மஞ்சள் இட்டு வழிபட்டதுடன் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது,
இக்கோவிலின் சிறப்பு அம்சமாக மக்கள் வாழ்க்கையில் உள்ள அனைத்து துன்பங்களையும், தீராத வழக்குகளையும் இக்கோவிலில் வழிபட்டு வந்தால் தீரும் என்பது இக்கோவிலுக்கு வரும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
இவ்விழாவில் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் பாலாஜி, மற்றும் அவரது மணைவியும், சமூக ஆர்வலருமான சர்மிளா, திருப்போரூர் ஒன்றிய குழு துணைத் தலைவர் சத்யா சேகர், பையனுர் ஊராட்சி மன்ற தலைவர் சுமிதா முத்துக்குமார், திருப்போரூர் தெற்கு ஒன்றிய செயலாளர் செல்வகுமார், மற்றும் கோவில் நிர்வாகி சிவ மூர்த்தி, கோவில் நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் என திரளானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்,

Comment here