இந்தியா

பொள்ளாச்சி பலாத்கார விவகாரத்தில் கைதான 4 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை – போலீஸ்

Rate this post

பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இதில் தொடர்புடைய சபரிராஜன் (வயது 25) திருநாவுக்கரசு (25), சதீஷ் (28), வசந்தகுமார் (27) ஆகியோரை போலீஸ் கைது செய்தது. கைதான  4 பேர்  மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் பேசுகையில், பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவத்தில் கைதானவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவத்தில் அரசியல் கட்சியனர் யாருக்கும் தொடர்பில்லை. உள்நோக்கத்துடன் தவறான செய்தி பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் தெரிவிக்கலாம் என கூறியுள்ளார்.
இரண்டு ஆண்டுகளாக தற்கொலை செய்துக்கொண்ட பெண்களின் விபரங்களை எடுத்தும் விசாரிக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comment here