
மார்கழிமார்கழி மாதத்தின் கடைசி நாளான இன்று போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பதற்கு ஏற்ப மக்கள் பழைய பொருட்களை தீயிட்டு எரித்து, போகி பண்டிகையை கொண்டாடினர்.
நாடு முழுவதும் பொங்கல் பண்டிகைக்கு முதல்நாள் போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. நெடுங்காலமாக இந்த போகி திருநாளில் பழைய பொருட்களை எரிக்கும் பழக்கம் மக்களிடையே இருந்து வருகிறது. போகிக் பண்டிகை என்பது இந்திரன் முதலியோரை பூஜித்து, திருப்தி செய்ய வேண்டிய நாள் என்று கூறுகின்றனர்.
ஆகையால் இன்று காலை சூரிய உதயத்திற்கு முன்னதாக வீட்டு வாசலின் முன்பாக, வீட்டில் இருக்கும் தேவை இல்லாத பழைய துடைப்பம் போன்ற குப்பைகள், தேவையில்லாத பழைய பொருட்கள் ஆகியவற்றை மக்கள் தீயிட்டு கொளுத்தினர். இதனால் வீட்டில் இருக்கும் திருஷ்டி கழியும் என்பது ஒரு ஐதீகம். பிறகு வீட்டின் வாசலை கழவி சுத்தம் செய்து அழகான கோலமிட்டு பொங்கலை வரவேற்றனர்.
Leave a Reply