அரசியல்

போயஸ் தோட்டத்தில் 32 மாவட்ட செயலாளர்களுடன் ரஜினிகாந்த் ஆலோசனை

Rate this post
சென்னை : நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றன.
இந்நிலையில், சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினிகாந்த் வீட்டில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் 32 மாவட்ட செயலாளர்களுடன் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்தக் கூட்டத்தில் தேர்தல் நிலைப்பாடு தொடர்பாக விவாதிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து நீக்கப்பட்ட சில நிர்வாகிகளையும் இந்தக் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
ரஜினிகாந்த் 32 மாவட்ட செயலாளர்களுடன் திடீரென ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Comment here