Uncategorized

போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்புங்கள்…… அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்

Rate this post

சென்னை : போராட்டத்தை கைவிட்டு ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பணிக்கு திரும்புமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது: மக்கள் பணியை நாம் அனைவரும் ஒன்றுபட்டு தொய்வின்றி தொடர்ந்து மேற்கொள்வோம். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கையை அதிமுக அரசு என்றும் புறந்தள்ளியதில்லை. எனது அன்பான வேண்டுகோளை ஏற்று நாளையே அனைவரும் பணிக்கு திரும்ப கேட்டுக்கொள்கிறேன். மக்களின் நலனுக்காக மாநில அரசு செயல்பட வேண்டும் இதில் என்னோடு அரசு ஊழியர்களுக்கும் பங்கு உண்டு. நாம் அனைவரும் ஒன்றுபட்டு உழைத்தால்தான் ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த முடிவும்.

7-வது ஊதியக்குழு பரிந்துரையை ஏற்று தமிழ்நாட்டிலும் ஊதியக்குழு அமைக்கப்பட்டது. அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு தந்ததால் அரசுக்கு கூடுதலாக ரூ.14,500 கோடி செலவு. கடுமையான நிதிச்சுமைக்கு இடையிலும் ஊதிய உயர்வு தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. சில நேரங்களில் சுயநலத்தை விட்டுக்கொடுத்து மக்கள் பணி ஆற்றுவது நமது கடமை. பருவமழை பொய்த்ததால் பல மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. கஜா புயல் பாதிப்பில் இருந்து மக்கள் இன்னும் மீண்டு வரவில்லை. அனைவரும் அர்ப்பணிப்பு உணர்வோடு அரும்பணியாற்ற வேண்டும். உரிமைகளை பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருப்பது பொருத்தமற்றது. இவ்வாறு அவர் கூறினார்.

Comment here