சினிமா

போலீஸ் கமிஷனரிடம் நடிகர் விஷால் மனு

சென்னை

நடிகர் சங்க தேர்தல் வருகிற 23-ம் தேதியன்று, அடையாரில் உள்ள எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் நடைபெறவுள்ளது. தேர்தலை அமைதியான முறையில் நடத்த பாதுகாப்பு கேட்டு சென்னை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதனை சந்தித்து, பாண்டவர் அணியை சேர்ந்த நடிகர் விஷால் மனு அளித்தார்.

பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த விஷால் கூறியதாவது:-

நடிகர் சங்க தேர்தலில் சுமார் 2 ஆயிரம் பேர் வரை வாக்களிக்க உள்ளனர். நடிகர் சங்க தேர்தலுக்கு பாதுகாப்பு அளிப்பது குறித்து பரிசீலனை செய்து வருவதாக, காவல் ஆணையர் தெரிவித்தார். அடையாரில் நடிகர் சங்க தேர்தல் நடப்பதால், எந்த வகையிலும் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலோ, பொதுமக்களுக்கு இடையூறோ ஏற்படாது என கூறினார்.

Comment here