விளையாட்டு

மகளிர் கிரிக்கெட்: நியூசிலாந்து அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி

Rate this post

நேப்பியர்: இந்திய மகளிர் கிரிக்கெட் அணியும் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேப்பியரில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 48.4 ஓவர்களில் 192 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது.

இதையடுத்து, 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி 33 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து எளிதாக வெற்றி இலக்கை எட்டியது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஸ்மிரிதி மந்தனா 105 ரன்கள் குவித்தார்.

Comment here