ஆன்மிகம்

மகா சிவராத்திரியை முன்னிட்டு திட்டக்குடி ஸ்ரீ வைத்தியநாத உடனுறை அசலாம்பிகை

மகா சிவராத்திரியை முன்னிட்டு திட்டக்குடி ஸ்ரீ வைத்தியநாத உடனுறை அசலாம்பிகை ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடை பெற்றது.

கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் அருள்மிகு வைத்தியநாத சுவாமி் ஆலயத்தில் மகா சிவராத்திரி முன்னிட்டு நான்கு கால பூஜைகள் பால் தயிர் இளநீர் சந்தனம் விபூதி உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது இதில் இரவு முழுவதும் கண்விழித்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சிவனை வழிபட்டனர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இதேபோல் திருவட்டத்துறையில் அமைத்துள்ள அருள்மிகு தீர்த்தபுரீஸ்வரர் ஆலயம், இறையூரில் அமைந்துள்ள அருள்மிகு தாகம்தீர்த்த புரீஸ்வரர் ஆலயம், பெண்ணாடத்தில் அமைந்துள்ள பிரளயகாலேஸ்வரர் ஆலயம் மற்றும் சுற்றியுள்ள சிவாலயங்களில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்

Comment here