விளையாட்டு

மகேந்திரசிங் தோனி

( எம் எஸ் தோனி ; பிறப்பு: 7 சூலை, 1981. இந்தியத் துடுப்பாட்ட அணியின் வீரர் மற்றும் முன்னாள் தலைவர் ஆவார். இவர் 2007 முதல் 2016 ஆம் ஆண்டு வரை ஒருநாள் போட்டிகளுக்கும் , 2008முதல் 2014 வரை தேர்வுத் துடுப்பாட்டத்திற்கும் தலைவராக இருந்தார். இவரின் தலைமையில் 2007 ஐசிசி உலக இருபது20 2007-08 பொதுநலவய போட்டித் தொடர், 2010மற்றும் 2016 ஆசியக் கோப்பை, 2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் மற்றும் 2013 ஐசிசி வாகையாளர் கோப்பைகளை இந்திய அணி வென்றுள்ளது. அதிரடியாக விளையாடும் இவர் மத்தியகள வீரராக விளையாடும் இவர் குச்சக் காப்பாளரான இவர் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக ஆட்டத்தினை முடித்துவைக்கும் திறன் கொண்டவர்களில் ஒருவராக அரியப்படுகிறார். மேலும் சர்வதேச அளவில் சிறந்த குச்சக் காப்பாளர்களில் ஒருவராகவும் அறியப்படுகிறார்.[6][7] 2012 ஆம் ஆண்டில் ஸ்போர்ட்ஸ் புரோ ஊடகத்தின் அதிக வியாபாரமாகக்கூடிய தடகள வீரர்கள் வரிசையில் இவருக்கு பதினாறாவது இடம் கிடைத்தது. இந்தியன் சூப்பர் லீக்கின் சென்னையின் எப் சி அணியின் உரிமையாளர்களில் ஒருவர் ஆவார்.[9] 2015 ஆம் ஆண்டில் போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்களில் இவருக்கு 23 ஆம் இடம்கிடைத்தது (31 மில்லியன் அமெரிக்க டாலர்) எம். எஸ். தோனி (திரைப்படம்) இவரின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது.

2004 ஆம் ஆண்டில் வங்காளதேசத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியிலும் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் அறிமுகமானார். 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் சிறந்த ஒருநாள் போட்டி வீரருக்கான விருதைப் பெற்றார். இந்த விருதினை இருமுறை வென்ற முதல் வீரர் இவர் ஆவார்.மேலும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது மற்றும் 2009ஆம் ஆண்டில் இந்திய குடிமகனுக்கானநான்காவது மிக உயரிய கவுரமாக கருதப்படும் பத்மஸ்ரீ விருது, 2018 ஆம் ஆண்டில், இந்திய அரசால் குடிமக்களுக்கு வழங்கப்பம் மிக உயரிய மூன்றாவ விருதான பத்ம பூசன் உள்ளிட்ட பல விருதுகளையும் தோனி பெற்றிருக்கிறார்[11]. 2009,2010 மற்றும் 2013 ஆம் ஆண்டிற்கான உலக லெவன் அணியின் தலைவராக இவர் தேர்வானார். மேலும் இந்த அணியில் எட்டு முறை இடம் பிடித்தார்.அதில் ஐந்து முறை தலைவராக இடம் பிடித்தார். நவமபர் 2011 இந்திய ரானுவம் இவருக்கு கௌரவ துணைநிலை கர்னல் பதவி அளித்தது.[12] கபில்தேவிற்குப் பிறகு இந்த விருதினைப் பெற்ற இரண்டாவது வீரர் இவர் ஆவார்.
விருதுகள்
2008 மற்றும் 2009ஆம் ஆண்டிற்கான ஐசிசி ஒருநாள் சர்வதேச போட்டிகள் விளையாட்டு வீரர் விருது (இந்த விருதை இரண்டு முறை பெற்ற முதலாவது இந்திய விளையாட்டு வீரர்), ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது மற்றும் 2009ஆம் ஆண்டில் குடிமகனுக்கான மிக உயரிய நான்காவது கவுரமாக கருதப்படும் பத்மஸ்ரீ விருது, 2018 ஆம் ஆண்டில், இந்திய அரசால் குடிமக்களுக்கு வழங்கப்பம் மிக உயரிய மூன்றாவது விருதான பத்மபூசன் உள்ளிட்ட பல விருதுகளையும் தோனி பெற்றிருக்கிறார்.[14] 2009ஆம் ஆண்டு நவம்பர் வரை ஐசிசி தரவரிசைப் பட்டியலில் தோனி அதிக மதிப்பெண் பெற்ற மட்டையாளராக இருக்கிறார். 2009ஆம் ஆண்டில் விஸ்டனின் முதலாவது கனவு டெஸ்ட் ஙீமி அணிக்கான தலைவராகவும் இடம்பெற்றிருக்கிறார். ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையால் தொகுக்கப்பட்ட உலகின் முதல் 10 அதிக வருமானம் ஈட்டும் துடுப்பாட்ட வீரர்களில் மகேந்திர சிங் தோனி முதலாவதாக இருக்கிறார். தோனி தலைமையிலான இந்திய அணி 2011 துடுப்பாட்ட உலகக்கோப்பையை வென்றது.

தனிப்பட்ட வாழ்க்கை
மகேந்திரசிங் தோனி, பான் சிங்கிற்கும் தேவகி தேவிக்கும் பிஹார், ராஞ்சியில் (தற்போது ஜார்கண்டில் உள்ளது) பிறந்தார். அவருடைய தாய் கிராமமான லவாலி உத்தர்கண்டின் அல்மோரா மாவட்டத்திலுள்ள லாம்கர்கா பகுதியில் உள்ளது. தோனியின் பெற்றோர், பான் சிங் எம்இசிஓஎன்-இல் இளநிலை நிர்வாகப் பொறுப்பில் பணியாற்றிய ராஞ்சிக்கு உத்தர்கண்டிலிருந்து சென்று குடியேறினர். தோனிக்கு ஜெயந்தி என்ற சகோதரியும் நரேந்திரா என்ற சகோதரரும் உள்ளனர். தோனி தனக்கிருந்த நீளமான முடியை தற்போது சுருக்கமாக வெட்டிவிட்டிருக்கிறார்; தனது விருப்பமான திரைப்பட நட்சத்திரம் ஜான் ஆப்ரஹாமைப் போல் இருக்க வேண்டும் என்பதற்காக அவர் இவ்வாறு வெட்டிக்கொண்டிருக்கிறார். தோனி ஆடம் கில்கிறிஸ்ட் ரசிகராவார், அவரது சிறுவயது முன்மாதிரிகள் துடுப்பாட்டம் தோழர் சச்சின் டெண்டுல்கர், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் பாடகி லதா மங்கேஷ்கர் ஆகியோராவர்.

தோனி ஜார்கண்ட் ராஞ்சியில் உள்ள ஷியாமளி டிஏவி ஜவஹர் வித்யாலயா மந்திரில் படித்தார் (இப்போது இந்தப் பள்ளி ஜேவிஎம், ஷியாமளா, ராஞ்சி என்றறியப்படுகிறது), அங்கு அவர் துவக்கத்தில் இறகுப்பந்தாட்டம் மற்றும் கால்பந்தில் சிறந்து விளங்கினார் என்பதோடு இந்த விளையாட்டுக்களில் மாவட்ட மற்றும் கிளப் அளவிலான ஆட்டங்களுக்கு தேர்வுபெற்றார். தோனி தனது கால்பந்து அணிக்கு கோல்கீப்பராக இருந்தார், உள்ளூர் துடுப்பாட்ட அணியில் விளையாடும்படி அவரது கால்பந்து பயிற்சியாளரால் அனுப்பிவைக்கப்பட்டார். அவர் துடுப்பாட்டம் விளையாடியது இல்லை என்றாலும், தோனி தனது விக்கெட்-கீப்பிங் திறமைகளால் பாராட்டப்பெற்று கமாண்டோ துடுப்பாட்டக் கிளப்பில் தொடர்ந்து விக்கெட் கீப்பராக விளையாடக்கூடியவரானார் (1995 – 1998). இந்த கிளப் துடுப்பாட்டத்தில் அவரது செயல்திறனின் அடிப்படையில் பதினாறு வயதிக்குட்பட்டோருக்கான வினு மான்கட் டிராபி சாம்பியன்ஷிப் 1997/98 பருவத்தில் விளையாட எடுத்துக்கொள்ளப்பட்டு அதில் அவர் நன்றாக விளையாடினார். தோனி தனது 10ஆம் வகுப்பிற்குப் பின்னர் துடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.

விளையாட்டு பாணி
டோனி ஒரு வலதுகை மட்டையாளரும், குச்சக் காப்பாளரும் ஆவார். ஜூனியர் அளவிலிருந்து தேசிய அணியை பிரதிநிதித்துவம் செய்யும் இந்திய ஏ அணியிலிருந்து வந்த விக்கெட் கீப்பர்களுள் டோனியும் ஒருவராவார் – பார்திவ் படேல், அஜய் ரத்ரா மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் இதே வழியைப் பின்பற்றி வந்தவர்களாவர். தனது நண்பர்களால் ‘மாஹி’ என்று குறிப்பிடப்படும் டோனி 1998/99ஆம் ஆண்டு கிரிக்கெட் பருவத்தில் பிஹார் கிரிக்கெட் அணியில் விளையாடத் தொடங்கினார், 2004ஆம் ஆண்டில் கென்யாவிற்கு சுற்றுப்பயணம் சென்ற இந்திய-ஏ அணியின் பிரதிநிதியாக தேர்வுசெய்யப்பட்டார். கௌதம் கம்பீருடன் இணைந்து ஒரு மூன்று-நாடுகள் தொடரில் பாகிஸ்தான் ஏ அணிக்கு எதிராக டோனி பல சதங்களை அடித்தார், அந்த ஆண்டின் பிற்பகுதியிலேயே இந்திய தேசிய அணிக்கு தேர்வுசெய்யப்பட்டார்.[சான்று தேவை]

டோனி பெரும்பாலும் அடிப்பகுதி கை கிரிப்பைக் கொண்டு பின்கால் பாணியிலேயே ஆட விரும்புகிறார். பந்தை நோக்கி அவருடைய கை வேகமாக செயல்படுவதால் அது மைதானத்திற்கு வெளியில் சென்று விழும் அளவிற்கு செல்கிறது. இந்த துவக்கநிலை பாணியில் அவருடைய கால் அதிக அசைவு கொடுக்காமல் இருப்பதனால் பந்தை அடிக்கையில் அது பல சமயங்களுக்கு பந்து பிட்ச் ஆகாத சமயங்களிலேயே நிறைய பந்துகள் இன்சைட் எட்ஜ் ஆகிவிடுகின்றன.

2005ஆம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த அவருடைய ஒருநாள் சர்வதேச போட்டியில் டோனி 148 ரன்கள் எடுத்தார் – அதுவே இந்திய விக்கெட் கீப்பர் எடுத்த அதிகபட்ச ரன் ஆனது. அந்த ஆண்டில் பிற்பகுதியில் ஸ்ரீலங்காவிற்கு எதிராக அவர் ஆட்டம் இழக்காமல் 183 ரன்கள் எடுத்து தனது சொந்த சாதனையை முறியடித்ததோடு இரண்டாவது இன்னிங்ஸில் தற்போதைய உலக சாதனையையும் செய்துள்ளார். வரம்பிற்குட்ட ஓவர்கள் ஆட்டத்தில் டோனி பெற்ற வெற்றி டெஸ்ட் அணியில் அவரது இடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளது. 2005/06ஆம் ஆண்டு முடியும்வரையில் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் அவருடைய சீரான செயல்திறனானது டோனிக்கு குறுகிய காலத்திலேயே ஐசிசி ஒருநாள் சர்வதேச தரவரிசையில் முதலாவது இடத்தைப் பெற்றுத்தந்திருக்கிறது.

2006ஆம் ஆண்டில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி,டிஎல்எஃப் கோப்பை மற்றும் வெளிநாட்டில் இரு அணி தொடர்களான மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகியவற்றில் டோனியின் விளையாட்டுத் திறன் குறைந்து வந்தது. 2007ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் ஸ்ரீலங்காவுக்கு எதிரான உள்ளூர் ஆட்டங்களில் விளையாட்டுத் திறனுக்கு திரும்பி வந்த நிலையில் 2007ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கோப்பையின் முதல் சுற்றில் இந்தியா படுதோல்வி அடைந்தபோது, டோனியின் விளையாட்டுத் திறன் போதுமானதாக இல்லை என்பதை நிரூபிக்கப்பட்டது. இந்தியா இழந்த இரண்டு ஆட்டங்களிலும் டோனி டக் அவுட் ஆகியிருந்தார். உலகக் கோப்பைக்குப் பின்னர் வங்காளதேசத்திற்கு எதிராக நடைபெற்ற இரு அணி ஒருநாள் சர்வதேசப் போட்டித்தொடரில் டோனி தொடர் நாயகன் விருதை வென்றார். இங்கிலாந்திற்கான சுற்றுப்பயணத்திற்கு டோனி ஒருநாள் சர்வதேசப் போட்டியின் துணைத்தலைவராக பரிந்துரைக்கப்பட்டார்.

ஒரு மட்டையாளராக, டோனி தனது அதிரடியான இயல்பைத் தடுத்து சூழ்நிலைக்கு தேவைப்படும்போது அந்த இன்னிங்ஸில் பொறுப்பாக விளையாடும் திறனை வெளிப்படுத்தினார். வழக்கமான மட்டை வீச்சையும் தாண்டி டோனியிடம் இரண்டு பழம்முறையிலான ஆனால் திறன்மிக்க கிரிக்கெட் மட்டைவீச்சு பாணிகள் இருந்தன. அவர் இந்திய கிரிக்கெட் அணிக்கு வந்ததிலிருந்து டோனியின் அதிரடியான மட்டை பாணி, களத்தில் பெற்ற வெற்றி, ஆளுமை மற்றும் நீண்ட தலைமுடி ஆகியவை இந்தியாவில் அவரை ஒரு குறிப்பிடத்தகுந்த சந்தை மதிப்பு உள்ளவராக மாற்றியது.

Comment here