தமிழகம்

மதுரை அருகே கண்டெய்னர் லாரியில் 6 பெட்டிகளில் இருந்த தங்க நகைகள் பறிமுதல்?

Rate this post
சென்னை : தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், மதுரை மாவட்டத்தில் கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான நடராஜன் உத்தரவின் பேரில் 70-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இவர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுதவிர மதுரை மாவட்ட எல்லைகளில் தீவிர வாகன சோதனை நடந்து வருகிறது.
இந்நிலையில்,  மதுரை மேலூர் சித்தம்பட்டி சுங்கச்சாவடி அருகே வாகன சோதனையில் 6 பெட்டிகளில் இருந்த நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பெட்டிகளில் இருப்பது கவரிங்கா? தங்கமா? என தேர்தல் பறக்கும் படையினர் விசாரித்து வருகின்றனர்.
கவரிங் நகைகள் என லாரியில் வந்தவர்கள் கூறியுள்ள நிலையில் தேர்தல் பறக்கும் படையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.  6 பெட்டிகளில் உள்ள நகைகள், தங்கமா என நகை மதிப்பீட்டாளர்களை கொண்டு ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆவணமின்றி எடுத்துச் சென்றதால் ஏராளமான பரிசு பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Comment here