மதுரை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தை கட்சி தொல் திருமாவளவன் பேட்டி:

Rate this post

 

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு மற்றும் மத்திய அரசு இணைந்து விரைந்து மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

மத்திய அரசின் வல்லுநர் குழு பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது இந்த நேரத்தில் தமிழக அரசு மத்திய அரசிடம் 15000 கோடி உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த காலங்களை தமிழக அரசு விடுத்த கோரிக்கையை மத்திய அரசு ஒரு பொருட்டாக மதித்ததில்லை தொகையில் ஒரு சதவீதம் கூட கொடுக்க முன்வரவில்லை. தானே புயல் ஓகி புயல் நாம் பார்த்திருக்கிறோம் 20000 கோடி கேட்டிருந்த நிலையில் 200 கோடி அளித்துள்ளது என்பதை ஒரு வாடிக்கையாக மத்திய அரசு கொண்டுள்ளது அதே போல இந்த முறையும் தமிழக மக்களை மத்திய அரசு வஞ்சித்து விடுமோ என்ற கவலை மிஞ்சுகிறது அவ்வாறு இல்லாமல் தமிழக அரசு முன்வைத்த கோரிக்கையை பரிசீலித்து பதினையாயிரம் கோடி நிதி வழங்க மத்திய அரசு முன் வரவேண்டும் மேலும் குடிசை வீடுகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு தற்போது தார்ப்பாய் வழங்கப்பட்டுள்ளது அது ஒரு தற்காலிக ஏற்பாடு அவர்களுக்கு நிலையான புயலால் பாதிக்கப் படாத வகையான வீடுகளைக் கட்டித்தர வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.

தென்னை விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு எத்தனை லட்சம் கொடுக்க வேண்டும் என்று தமிழக அரசு தீர்மானித்துள்ளது அந்த தொகை போதாது என்று தென்னை விவசாயிகள் கூறுகின்றனர் எனவே தென்னை விவசாயிகளுக்கு கூடுதலாக இழப்பீட்டு தொகை வழங்க முன்வர வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது.

மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்குவது என்பது போதுமானதாக இல்லை அவர்களுக்கு தலா 50 லட்சம் ரூபாய் வழங்க மத்திய மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

அதுபோல் கால்நடைகள் உயிரிழப்பு மற்றும் பயிர் சேதங்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு உரிய நிவாரண தொகை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

நாளை வேதாரணியம் பகுதிக்கு செல்ல இருக்கின்றேன் கடந்த ஒரு வார காலமாக உடல்நிலை சரியில்லாததால் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட இயலவில்லை நாளை 26ம் தேதி வேதாரண்யம் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சந்திக்கிறோம்.

தமிழக அரசிடம் முதலமைச்சர் பொது நிவாரண நிதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக ரூபாய் 10 லட்சம் வழங்கியிருக்கிறோம்.

மேலும் 10 லட்சம் ரூபாய் மதிப்பிற்கு மேலான நிவாரணப் பொருள்கள் சேகரிக்கப்பட்டுள்ளன அவற்றை பொதுமக்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ளோம்.

சிவகாசியில் பட்டாசு உற்பத்தி செய்யும் ஆலைகள் மூடப்பட்டுள்ளன அது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது இதனால் 8 லட்சம் பட்டாசு தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது எனவே இந்த பிரச்சினையில் மத்திய அரசு தொழிலாளர்களின் நலன்களை கருத்தில் கொண்டு ஒரு நல்ல முடிவை அறிவிக்க வேண்டும் மாசுபடுவதற்கு பட்டாசுகள் மட்டுமே காரணம் இல்லை மாசில்லாத பட்டாசுகளை உற்பத்தி செய்வதற்கு வெறும் அறிவிப்பு மட்டும் போதாது அதற்குரிய ஆய்வு மற்றும் நடைமுறை தொடர்பான வழிகாட்டுதல் தேவை எனவே மத்திய அரசு அதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் அகில இந்திய மாநிலங்களுக்கு பட்டாசு வினியோகம் செய்கின்ற சப்ளை செய்கின்ற ஒரு மையமாக சிவகாசி விளங்குகிறது அந்த முக்கியத்துவத்தை போல மத்திய அரசின் முடிவுகள் அமைந்துவிடக்கூடாது நீதிமன்றத்தை வழிகாட்டலை தந்தாலும் கொள்கை முடிவு எடுக்கும் அதிகாரம் அரசுக்கு உள்ளது எனவே தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகின்றன.

மக்கள் பாதிப்படைந்த நிலையில் அவர்களுக்கு வருத்தமும் கோபமும் மேல் இடுவது தவிர்க்கமுடியாதது ஆகவே இந்த நேரத்தில் மக்கள் கோபப்பட்டார்கள் அமைச்சர்கள் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களை அவமதித்தார்கள் என்று காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுப்பது கண்டிக்கத்தக்கது இத்தகைய நேரங்களில் மக்களுடைய கோபங்களை பொறுத்துக் கொள்வது சகித்துக் கொள்வது அவசியமானது எல்லாவற்றையும் இழந்த மக்கள் ஆத்திரப்படுவது அதிகாரிகளும் அமைச்சர்களும் அரசியல் பிரதிநிதிகளும் ஆத்திரப்படாமல் அதை பொறுத்துக் கொள்ள வேண்டியது அவசியம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சுட்டிக்காட்டுகின்றது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*