இந்தியா

மத்தியப் பிரதேசம் அருகே அவல் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து – 3 பெண்கள் கருகி பலி

Rate this post

மத்தியப் பிரதேசம் அருகே அவல் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்தில் 3 பெண்கள் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

திடீரென தீ விபத்து

மத்தியப் பிரதேசம், உஜ்ஜயின் மாவட்டம் அருகே அவல் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று உள்ளது. இந்த தொழிற்சாலையில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ விபத்தில் 3 பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசாரும், தீயணைப்புத்துறையினரும் கடுமையாக போராடி தீயை அணைத்தனர்.

இது தொடர்பாக உஜ்ஜைன் மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் சிங் கூறுகையில் –

தொழிற்சாலையின் உற்பத்தி பிரிவில் பணிபுரியும்போது இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணம் குறித்து இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இறந்தவர்கள் துர்கா (45), ஜோதி பாய் (25) மற்றும் சம்மா பாலிவால் (45) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஒரு பெண் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்றார்.

Comment here