பிரத்யகம்பொது

மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் சம்பள உயர்வு

நாடு முழுவதும் உள்ள, ஒரு கோடிக்கும் மேற்பட்ட, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு சம்பள உயர்வு அளிக்கும், ஏழாவது ஊதியக் கமிஷன் அறிக்கை, விரைவில் அமலுக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

ஊதியக் கமிஷன் அறிக்கை மீதான தங்களுடைய பரிந்துரையை, அரசு செயலர்கள் குழு, மத்திய அரசிடம் அளித்துள்ளது. இம்மாத இறுதியில் நடக்கும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில், இதுகுறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டு, அறிவிப்பு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து, மத்திய நிதித் துறை செயலர் அசோக் லாவசா கூறியதாவது: மத்திய அமைச்சரவை செயலர் பி.கே.சின்கா தலைமையிலான, மத்திய அரசு செயலர்கள் குழு, தன் அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. இம்மாத இறுதியில் நடக்கும் அமைச்சரவை கூட்டத்தில், இதுகுறித்து விவாதிக்கப்பட்டு, அறிவிப்பு வெளியிடப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Comment here