அரசியல்இந்தியாதமிழகம்பொதுவிளையாட்டு

மத்திய அரசு ரூ.1.8 கோடி நுழைவு கட்டணம் செலுத்தவில்லை : வீரர்கள் விரக்தி

Rate this post

ஆசியா பாரா விளையாட்டு போட்டிக்கு நுழைவு கட்டணம் செலுத்தாததால் இந்திய வீரர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இந்தோனேசியா தலைநகர் ஜகாத்தாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான மூன்றாவது ஆசிய பாரா விளையாட்டு வரும் 6ம் தேதி தொடங்குகிறது. இந்தியா, சீனா உள்ளிட்ட 43 நாடுகள் பற்கேற்கும் இந்த விளையாட்டு போட்டியில் இந்தியா சார்பில் வீரர்கள், பயிற்சியாளர்கள் என மொத்தம் 302 பேர் கலந்துக் கொள்ள உள்ளனர். இந்த போட்டியின் தொடக்க விழாவில் இந்தியாவின் மூவர்ணக் கொடியை மாரியப்பன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ரியோ ஒலிம்பிக்கில் தக்கம் வென்ற மாரியப்பனை கவுரவிக்கும் விதமாக இம்முறை செயல்படுத்த உள்ளது. ஆசிய பாரா விளையாட்டில் பங்கேற்க முதல் கட்டமாக 50 வீரர்கள் ஜகார்த்தா சென்றனர். ஆனால், மத்திய அரசு சார்பில் தரப்பட வேண்டிய பதிவுக்கட்டணம் 1 கோடியே 80 லட்சம் ரூபாய் கட்டணம் கட்டவில்லை. இதனால், வீரர்கள் விளையாட்டு பகுதிக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில், மத்திய அரசு வேகமாக நடவடிக்கை எடுத்து உடனே பதிவு செலுத்தப்படும் என உறுதி அளித்தது. இதனையடுத்து, வீரர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

Comment here