அரசியல்

மத்திய பட்ஜெட்: அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து

சென்னை,

இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்திருக்கும் பா.ஜ.க. அரசின் முதல் பட்ஜெட்டை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். 2019-2020 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

  • நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட், நடுத்தர மக்களுக்கான பட்ஜெட். சுயஉதவி குழு பெண்கள் உடனடியாக ரூ5 ஆயிரம் பெற பட்ஜெட்டில் வழிவகை செய்யப்பட்டுள்ளது – தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்

  • மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள மத்திய பட்ஜெட் நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லும் பட்ஜெட் – புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி

  • இது வளர்ச்சிக்கான பட்ஜெட். இலக்கை அடைய சிறந்த பாதையாக இந்த பட்ஜெட் அமையும். விவசாயிகளுக்கும் பென்சன் போன்ற சிறப்பான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது -மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர்

  • மக்களுக்கு தேவையான திட்டங்கள் இல்லாமல் முரண்பாடுகளின் தொகுப்பாக பட்ஜெட் அமைந்துள்ளது. மத்திய அரசின் புதிய இந்தியா குறித்து மக்களுக்கு அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது -டிடிவி தினகரன்

  • மத்திய பட்ஜெட், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. மக்களுக்கு நன்மை அளிக்கக்கூடிய வகையில் அமையவில்லை. வேலைவாய்ப்பின்மை, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றுக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் தரப்படவில்லை -இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா

  • பெட்ரோல், டீசல் மீதான கூடுதல் வரி ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது -அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் நவநீதகிருஷ்ணன்

  • பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் எதுவும் இல்லை, இது ஏமாற்றக்கூடிய பட்ஜெட்டாக உள்ளது. வேலைவாய்ப்பு தொடர்பாக எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இல்லை -திருநாவுக்கரசர் காங்கிரஸ் எம்.பி.

  • மத்திய பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்டாக உள்ளது. ஏழை மக்களின் தேவைகளை அரசு அறியவில்லை – காங்கிரஸ் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம்

மத்திய பட்ஜெட் தாக்கலின்போது 2 மணி நேரம் 7 நிமிடங்கள் தொடர்ந்து இடைவிடாது மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேசியது அவையில் இருந்த அனைவரையையும் வியப்படைய வைத்தது.

Comment here