அரசியல்

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் அரசின் போலி விவசாய கடன் தள்ளுபடி திட்டத்தால் அதிருப்தி …

Rate this post

ஓரே நேரத்தில் கூண்டோடு தற்கொலை செய்து கொள்ளப்போவதாக ஆயிரக்கணக்கான விவசாயிகள் அறிவிப்பு!

#சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபைக்கான தேர்தலில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கரில் காங்கிரஸ் வெற்றி பெற்று பிற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை பிடித்தது. ஆட்சி பொறுப்பேற்றவுடன் வரும் பாராளுமன்ற தேர்தலை மனதில் கொண்டு அவசரம், அவசரமாக விவசாயக் கடன் தள்ளுபடி திட்டத்தை அறிவித்தனர்.

கர்நாடக மாநிலத்திலும் ஏற்கனவே இத்திட்டத்தை அறிவித்தனர். ஆனால் இந்த திட்டத்தின்படி விவசாயிகள் அனைவரும் பயனடையவில்லை. அரசுக்கு வேண்டப்பட்டவர்களுக்கே இந்த திட்டம் பயன்பட்டு வருகிறது என்றும் இந்த திட்டம் போலி தள்ளுபடி திட்டம் எனவும் கூறி விவசாயிகள் ஆங்காங்கு போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அரசு அறிவித்த ₹24 ஆயிரம் கோடி விவசாயக் கடன்தள்ளுபடி திட்டத்தால் காங்கிரசாருக்கு வேண்டப்பட்ட 800 பேர்களே பயன்பெற்றதாகக் கூறி கர்நாடகாவில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

தள்ளுபடி திட்டத்தால் ஏமாற்றம் அடைந்த எட்டு விவசாயிகள் அங்கு தற்கொலை செய்து கொண்டனர்.

இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலத்திலும் இதே போன்ற புகார்களைக் கூறி விவசாயிகள் போராட்டம் நடத்தினர். தற்போது மத்திய பிரதேசத்திலும் விவசாயக் கடன்தள்ளுபடி திட்டத்தில் காங்கிரசார் முறை கேடுகள் செய்துள்ளது அம்பலமானது . கடந்த வெள்ளிக் கிழமை இந்த மாநிலத்தை சேர்ந்த ஹில்கான் கிராமத்தில் உள்ள பஞ்சாயத்து அலுவலகத்தை ஆயிரக்கணக்கான கிராம மக்கள் சூழ்ந்தனர்.

அங்கு அறிவிப்புப் பலகையில் ஒட்டப்பட்டிருந்த அறிவிப்பில் பெரும்பாலானோருடைய பெயர்கள் விடுபட்டிருந்தன. கடன் பாக்கியே இல்லாதவர்களின் பெயர்கள் கடனாளிகள் பட்டியலில் இருப்பதை பார்த்த அவர்களுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. கடன்கட்டாதவர்களுக்கு கடன் தள்ளுபடியாகி இருந்ததையும் பார்த்த அவர்களுக்கு அதிர்ச்சி அளித்தது. அவர்கள் அனைவரும் ராம் குமார் சிங் என்ற விவசாயியின் தலைமையில் முற்றுகை ஆர்பாட்டம் செய்தனர்.

இது குறித்து ராம் குமார் சிங் கூறுகையில் இங்கு விவசாயக் கடன் தள்ளுபடி திட்டத்தில் நிறைய குளறுபடிகளை உருவாக்கி அப்பாவி விவசாயிகளை பயன் பெறாமல் செய்து வருகின்றனர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு காலமான என் தந்தை கடனே வாங்கவில்லை. அவர் பெயரில் ₹9,547 கடன் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதேபோல பிரதமர் மோடி அறிவித்த பயறுவகைகள் உற்பத்தி ஊக்கத்திட்டத்தில் நான் பெற்ற கடன் ₹17,000 மட்டுமே. நான் பெற்ற கடன் ₹70,481 என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் எனக்கு கடன் தள்ளுபடி ஆகவில்லை.

வேண்டுமென்றே இவ்வாறு செய்து உண்மையில் அதிக கடன் வைத்துள்ள பெரிய விவசாயிகளே இந்த கடன் த்தள்ளுபடி திட்டத்தில் பயனடைந்துள்ளனர் என்றும், இதே போல நூற்றுக்கணக்கான தகுதியுடைய விவசாயிகளின் பெயர்கள் விடப்பட்டுள்ளதால் உடனே இவற்றை அரசு சரி செய்ய வேண்டும், இல்லை என்றால் எங்கள் கிராமத்தினர் அனைவரும் ஒரே நேரத்தில் கூண்டோடு தற்கொலை செய்து கொள்ள திட்டமிட்டுள்ளோம் எனக் கூறினார்.

இந்த நிலையில் விவசாய குடும்பத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகை இட்டனர். இது தெரிந்த முதல்வர் கமல்நாத் இந்த விவகாரத்தில் விசாரணை கமிஷன் அமைக்கப் போவதாக கூறியுள்ளார். என்றாலும், விவசாயிகள் காங்கிரசாரின் ஊழல் மனப்பான்மையை எண்ணி இன்னமும் கோபத்தில் உள்ளனர்

Comment here