ஆன்மிகம்

மந்திர மயில்

ஓம் என்னும் மந்திரத்தின் வடிவமான மயில் மீது முருகன் காட்சியளிப்பதாக புராணங்கள் கூறுகின்றன. அதனால் இந்த மயிலுக்கு ‘மந்திர மயில்’ என்று பெயர்.

மயில் மீது முருகனை தரிசிப்பதை ‘குக ரகசியம்’ என்றும் ‘தகராலய ரகசியம்’ என்றும் ஞானிகள் குறிப்பிடுவர். பாம்பன் சுவாமிகள், மயில் மேல் முருகன் எழுந்தருள வேண்டும் என்ற விதத்தில் பத்து பாடல்கள் பாடியுள்ளார்.

இந்த பாடல்களைப் பக்தியுடன் படிப்போருக்கு முருகனை தரிக்கும் பாக்கியம் உண்டாகும் என்று சுவாமிகளே குறிப்பும் எழுதியுள்ளார். ‘ஸ்ரீமத் குமாரசுவாமியம்’ என்னும் நூலில் ‘பகை கடிதல்’ என்னும் தலைப்பில் இப்பாடல்கள் இடம் பெற்றுள்ளன.

Comment here