தொழில்நுட்பம்

மந்” என்றால் மனம்

மந்திரம் என்றால் என்ன?

NTN சுந்தரமூர்த்தி கந்தன்குடில் நடேசசிவாச்சாரியார்*…


மந்திரம் என்ற சொல் ஆதி சமஸ்க்ருத மொழியில் இருந்து வந்தது.
“மந்” என்றால் மனம்;
“திர” என்றால் விடுதலை.
ஆகவே மந்திரம் என்பது நம் மனதை பல உலகார்ந்த எண்ணங்களில் இருந்து விடுதலையாக்க உருவாக்கப்பட்ட உன்னத ஒலிகளின் ஒரு கூட்டமாகும்.

மந்திரத்தை மனனம்+திரயதே என்றும் பிரிக்கலாம். மனனம் என்றால்
நினைப்பது, ஜெபிப்பது, உச்சரிப்பது எனப்பொருள் கொள்ளலாம். திரயதே என்றால் காப்பாற்றுதல் என்று பொருள். ஆக ஜெபிப்பவரை அல்லது உச்சரிப்பவரை காப்பாற்றுவது என்று பொருள்.

மற்றொரு வகையில் “மந்” என்றால் மனம், “திர” என்றால் பிராணன் மனமும் பிராணனும்
கலக்க செய்வது மந்திரம் எனப்படும்.

பிரபஞ்சத்தின் தோற்றம் ஒலியில் இருந்தே உற்பத்தியாகியது எனக் கூறப்படுகிறது. மந்திரங்கள் பிரபஞ்சத்தில் உள்ள தெய்வ
சக்தியின் அதிர்வலை குறியீடுகள், ஒவ்வொரு வகை தெய்வ சக்திக்கும் ஒவ்வொரு அதிர்வலைகள் உண்டு,

FM ரேடியோவில் ஒவ்வொரு
ஸ்டேஷனுக்கும் ஒவ்வொரும் “அலைவரிசை(frequency)”
இருப்பது போல் பிரபஞ்சத்தில் உள்ள
ஒவ்வொரு தெய்வ சக்திக்கும் ஒவ்வொரு அதிர்வு உண்டு. ஒவ்வொரு சமஸ்க்ருத எழுத்தும் ஒரு தேவதையை (சக்தி நிலையை)
குறிக்கிறது.

மந்திரங்களை உச்சரிக்கும் போது அதற்குரிய பிரபஞ்ச அதிர்வலைகள்
நவகிரகங்கள் மூலமாக பூமியில் வந்து நமது சுவாசத்தின் வழியாக சூட்சும உடலில் சேர்ந்து பின் ஸ்தூல உடலில் செயல்படுகிறது.

இந்த பிரபஞ்ச அதிர்வலைகள் ஒருவர் செய்யும் கர்மங்களுக்கு (செயல்) ஏற்ப உடலில் கூடிக்குறையும், இவை அதிகமாக இருக்கும் போது வாழ்வின் நல்ல பகுதிகளான ஆரோக்கியம், அமைதி, ஆனந்தம் செல்வம் என்பன இருக்கும். இந்த அதிர்வலைகளை மனித மனம் ஈர்த்து சேமித்து அதன் மூலம் நன்மை அடைவதற்காக ரிஷிகள் வகுத்து வைத்த வழியே மந்திரங்கள்.

மந்திரம் என்றால் அது சமஸ்க்ருதம் மட்டும் தானா ? என்று சிலர் கேட்கக் கூடும். ஆதி தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம் சுருக்கமான ஆனால் ஆழமான பொருள் தரும் சூத்திரத்தினை முன்மொழிகிறது.

“நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த,
மறைமொழிதானே மந்திரம்
என்ப” (சொல்லதிகாரம், 480). “நிறைமொழி
மாந்தர்” என்பதை சைவ சித்தாந்த
வார்த்தையில் விளக்குவதானால் சிவத்துடன் இரண்டறக்கலந்தவர்கள், வேதாந்த மொழியில் சொல்வதானால் பிரம்மத்துடன் கலந்தவர்கள்.
இவர்களே நிறைமொழி மாந்தர் எனப்படுவர்.
இவர்கள் சொல்லும் மொழி எல்லாம்
மந்திரங்கள் எனப்படும். இதன் படி ரிஷிகள், சித்தர்களின் வாக்குகள், நாயன்மார்கள் ஆழ்வார்கள் ஆகியோரின் பாடல்கள்,
ஸ்தோத்திரங்கள் ஆகியவை எல்லாமே மந்திரம் என்று கூறலாம்.

இயற்பியலில் (Physics) ஒலி அலை அதிர்வு (resonance) பற்றி நீங்கள் ஒருவேளை அறிந்திருக்கலாம். ஒரு பகுதியின் இயற்கை அதிர்வுடன் அதே அளவான அதிர்வுகள் பரிவுறும் போது சக்தி கடத்தப்படும், இதே
கோட்பாடுதான் மந்திர சாதனையிலும்
நிகழ்கிறது, ஒரு மந்திரம் பிரபஞ்ச சக்தியின்
இயற்கை அதிர்வினை ஒத்து நம் மனதிற்குள்
ஒரு அதிர்வினை உருவாக்கி சக்தியினை
பெற்றுக்கொள்ளும். மந்திரங்களை உச்சரிக்கும் போதும் அதுதான் நடக்கிறது….
நன்றி….

Comment here