ஆன்மிகம்

மாங்கனி விநாயகர்

ஞானப்பழத்தைப் பெறுவதில் விநாயகருக்கும், முருகப்பெருமானுக்கும் போட்டி நிலவியது. அவர்கள் இருவருக்கும் பிரச்சினையின்றி அந்தப் பழத்தை வழங்க சிவபெருமான் முடிவு செய்தார்.  அதனால் இந்த உலகத்தை முதலில் யார் சுற்றி வருகிறார்களோ, அவர்களுக்குத்தான் பழம் என்று உமையவளும், சிவனும் முடிவெடுத்தார்கள்.

அந்த முடிவைக் கேட்ட முருகப்பெருமான், மயிலில் ஏறி உலகை வலம்வரத் தொடங்கினார். ஆனால் அவர் வருவதற்குள் பெற்றோரை வலம் வந்து, பெற்றோரைச் சுற்றினால் உலகத்தைச் சுற்றியதற்கு சமம் என்று கூறி விநாயகப் பெருமான் ஞானப்பழத்தைப் பெற்று விட்டார்.
அங்ஙனம் மாம்பழ விநாயகராகக் காட்சியளிக்கும் திருக்கோலம், புதுக்கோட்டை மாவட்டம் திருவேங்கிவாசல் வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோவிலில் இருக்கிறது. இந்த மாம்பழ விநாயகரை வழிபட்டால் மனம் இனிக்கும் செய்திகள் வந்து சேரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Comment here