Sliderபிரத்யகம்

மாங்கல்யம் தந்துநாநேந

Rate this post

ஸ்வாமி ஒரு பெண்ணை சோமன் முதலிலும் கந்தர்வன் இரண்டாவதாகவும் அக்னி மூன்றாவதாகவும் பின்பு மனிதன் நான்காவதாகவும் மணம் செய்து கொள்கிறான் என்று கல்யாண மந்திரம் சொல்கிறது என்கிறார்களே அப்படியானால் ஒவ்வொரு பெண்ணுக்கும் கணவனை தவிர்த்த மூன்றுபேரும் கணவர்களா

எனது பகுத்தறிவு நண்பன் எலே உங்க பிராமணபொண்ணுகளுக்கு நான்கு புருஷனாமேடே ஏலே இதை நான் சொல்லலை உங்க இராமானுஜரே சொல்லிருக்காரு என்று கேலி செய்கிறான் அது உண்மையா அதை விளக்க முடியுமா

அடியேன் திருமணத்தின் போது திருமாங்கல்யம் அணிவித்து சொல்லும் மந்திரமும் அந்த மந்திரத்திற்கான விளக்கமும் பார்ப்போம்

மாங்கல்யம் தந்துநாநேந மம
ஜீவித ஹேதுநா கண்டே பத்நாமி
ஸூபகே ஸஜீவ ஸரதஸ்ஸதம்

இது மணமகன் சார்பாக சொல்வதாக
அமைந்த மந்திரம்

மந்திரத்தை வாத்யார் ஸ்வாமி எடுத்துக்கூற மணமகனும் திரும்பகூறி அக்கினி சாஷ்யாக மணமகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் இந்த வைபவத்தை திருமாங்கல்யதாரணம் என்பர்

இதன் பொருள்

உன்னோடு நான் நீடுழி வாழ வேண்டி இந்த
மங்கல நாணை உன் அழகிய கழுத்தில்
அணிவிக்கிறேன் எல்லாப் பேறுகளும் பெற்று நீ
நூறாண்டு நிறைவான வாழ்க்கை வாழ
இறைவன் அருள் புரியட்டும் என்பதாகும்

அதன் பிறகு சொல்லும் மந்திரத்தில்

ஸோம ப்ரதமோ விவிதே
கந்தர்வ விவிதா: உத்ட்ராஹ
த்ரியோ அஹ்னித்தெபிதீஹ
துரியஷ்டெமனுஷ்யஜஹ

ஷோம ததத் கந்தர்வ கந்தர்வ தத்தயன
யே ரயின்ஷப்பூதரம் ஸ்காதத்
அக்னிர்மஹைமதோ இமாம்

என்று ஒரு மந்தர பிரயோகம் வரும்

இதன் பொருள் என்னவென்றால்

ஹே பெண்ணே முதலில் சோமன் (சந்திரன்) உன்னை பாதுகாத்தான

பின் கந்தர்வன் உன்னை பாதுகாத்தான்

மூன்றாவதாக அக்னி உன்னை பாதுகாத்தான்

நான்காவதாக மனிதனாகிய நான் உன்
பாதுகாவலன் ஆகிறேன் என்பதாகும்

இதை தான் உமது பகுத்தறிவு பகலவ நண்பன் தவறாக புரிந்து கொண்டு இராமானுஜர் மன்னன் முன்னிலையில் வாதத்தில் ஜெயிக்க எந்த அர்த்தத்தில் கூறினார் என புரியாமல் தெரியாமல் உளறுவதை பற்றி கவலை கொள்ள வேண்டாம்

தேவரீர் அவர்களிடம் வாதிடுவது விழலுக்கு இறைத்த நீர் போன்றது

தேவரீருக்கு நன்கு தெரிந்துகொள்ள அதன் உட்பொருளை உமக்கு சொல்லுகிறேன்

இதன் உட்பொருள்

ஒரு பெண் குழந்தை பிறந்து தானாக ஆடைகளை அணியும் பருவம் (4 – 5 வயது) வரை சந்திர ஒளியின் மென்மை குளிர்மையை ஒத்த குணங்களை பெற்று வளர்கிறது

ஆகவே இப்பருவம் சந்திரனின் ஆதிக்கத்தின் ( பாதுகாப்பில்) கீழ் இருக்கும் பருவம் எனப்படுகிறது

கந்தர்வன் என்பது இசைக்கும் கேளிக்கைக்கும்
அழகியலுக்கும் அதிபதியாக சொல்லப்படும் தேவதை

ஒரு பெண்குழந்தையின் 5 – 11 வயது காலம் என்பது குறும்பும் அழகும் நிரம்பி வழிய கள்ளம் கபடம் இல்லாமல் துள்ளி திரியும் காலம் ஆகவே இது கந்தர்வனின் ஆதிக்கத்தில் (பாதுகாவலில்) இருக்கும் பருவம் எனப்படுகிறது.

அதன் பின் 11 – 16 வயது பருவ காலம் உடலில்
ஹோமோன்களின்மாற்றத்தால் உடலமைப்பு மெல்ல மாற உஷ்ண அழுத்த மாற்றங்கள் ஏற்பட்டு பூப்படையும் பருவம்

காமவெப்பம் மெல்ல உடலில் தொற்றிக்கொள்ளும் மங்கை பருவம் ஆகவே இது அக்னி (சூடு- வெப்பம்-காங்கை) யின் ஆதிக்கத்தின் ( பாதுகாவலில்) கீழ் வரும் பருவம் எனப்படுகிறது

இப்படி ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு தேவதைகளின்அருளால் பெண்மைக்குரிய அம்சங்களை எல்லாம் அழகுற பெற்று இன்று என்முன்னால் மங்கையாய் அமர்ந்திருக்கும் உனக்கு

குறைவிலா நலமே தர இப்போது மானிடன் ஆகிய நான் அக்னி சாட்சியாக உன் பாதுகாவலனாகிறேன் நம் உறவை மீண்டும் இந்த அக்னியை தவிர யாரும் பிரிக்க முடியாது

அதாவது இந்த கால விவாகரத்து என்பது நாமே வகுத்த சட்டத்தில் தான் செல்லுபடியாகும் ஆனால் திருமணபந்தம் மந்ரம் நம் மணமகன் மணமகள் உறவை அந்திமகால மாயான அக்னி மட்டுமே இந்த ஜன்மத்தில் பிரிக்கும் என்கிறது

இது தான் இந்த வேதமந்திரத்தின் உட்பொருள்

யாரோ தெரியாமல் புரியாமல் கேலி செய்கிறான் என்பதற்காக நாமே நம் மந்திரங்கள் அப்படியா சொல்கிறது என தவறாக புரிந்து கொள்ள கூடாது

முன்னோர்கள் மிக மிக மிக புத்திசாலிகள்

இந்த கேள்வியை கேட்ட நீரும் கேட்க வைத்த உமது நண்பன் பகுத்தறிவு பகலவனும் பதினாறு வகை செல்வமும் பெற்று ஆண்டவன் அருளால் பல்லாண்டு பல்லாண்டு வாழ்வீர்களாக

Comment here