மாவட்டம்

மாணவ மாணவிகள் தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் வகையில்ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் ஆலயத்தில் சிறப்பு லட்சார்ச்சனை.

Rate this post
காஞ்சிபுரம் விளக்கொளி பெருமாள் ஆலயம் அருகே தனி சன்னதி கொண்டு அமர்ந்து அருள் பாலித்து வரும் ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் சன்னதியில் மாணவ.மாணவிகள் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெறவும்.கல்வி அபிவிருத்திக்காகவும் கல்விக்கடவுள் லட்சுமி ஹயக்ரீவருக்கு தீபம்ஏற்றியும்  பக்தர்கள் சங்கல்பம் செய்து லட்சார்ச்சனை செய்தும் வழிபட்டனர்.இவர்கள் அனைவருக்கும் எழுதுபொருட்கள்.மற்றும் நோட்டு புத்தகங்களும் பிரசாதங்களாக வழங்கப்பட்டது.விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாகி வழக்கறிஞர் சௌந்தர்ராஜன் விழாக்குழுவினருடன் இணைந்து சிறப்பாக செய்திருந்தார்.ஏராளமான மாணவ.மாணவிகள் தங்களின் பெற்றோர்களுடன் இதில் கலந்துகொண்டனர்

Comment here