ஆயுர்வேதம்இந்தியாஇல்லறம்தமிழகம்பொதுமருத்துவம்

மாதவிடாய் காலத்தில் வயிற்று வலியை போக்க முடியுமா ?

Rate this post

பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலியால் பெரும்பாலானோர் செய்வதறியாது வலியை தாங்கிக் கொள்ள மட்டுமே செய்கின்றனர். ஆனால், வீட்டிலேயே எளிய வழியை கடைபிடித்தால் மாதவிடாய் பிரச்சனைகளுக்கு எளித தீர்வை பெறலாம். இதனைப் பற்றி தற்போது பார்ப்போம்…

ஓமம்
ஓமத்தை பொடி செய்து, அதில் அரை டேபிள் ஸ்பூன் எடுத்து வெதுவெதுப்பான பாலில் கலந்து தினமும் இருவேளை (காலை மற்றும் மாலை வேளைகளில்) பருகி வரலாம். மாதவிடாய் ஆரம்பிப்பதற்கு 15 நாட்களுக்கு முன்பிருந்தே இந்த வழிமுறையை பின்பற்ற வேண்டியது அவசியம்.

கடுகு
கடுகை தண்ணீரில் கொதிக்க விடவும். இவ்வாறு கொதிக்க வைத்த தண்ணீரில் ஒரு பருத்தித் துணியை நனைத்து, லேசாக பிழிந்த பின், அதனை மாதவிடாயினால் அவதிப்படும் பெண்ணின் வயிற்றின் மீது வைத்து எடுக்கவும். இவ்வாறு செய்வதன் மூலம் அப்பெண்ணுக்கு நிவாரணம் கிடைக்கும். இந்த வழிமுறை மாதவிடாய் காலங்களின் போது ஏற்படக்கூடிய வலியை நிறுத்துவதற்கு பெரிதும் உதவும்.

வெந்தயம்
மாதவிடாயின் போது வெந்தயத்தை தண்ணீரில் கொதிக்க வைத்து, அத்தண்ணீரை தினமும் இரு வேளை அருந்தலாம். இது உங்களுக்கு நல்ல நிவாரணத்தைக் கொடுக்கும்.

கருஞ்சீரகம்

அரை டேபிள் ஸ்பூன் கருஞ்சீரகத்தை இரண்டு கப் தண்ணீரில் கொதிக்க விடவும். இரண்டு கப் தண்ணீர் ஒரு கப்பாக குறையும் வரை தொடர்ந்து கொதிக்க விடவும். பின் இத்தண்ணீரை வடிகட்டி தினமும் ஒருவேளை பருகி வரவும். இவ்வாறு செய்வது மாதவிலக்கின் போது ஏற்படக்கூடிய வலியைக் குறைக்க பெரிதும் உதவும்.

பெருங்காயம்
நெய்யில் பெருங்காயத்தை வறுக்கவும். அதனை அரை டம்ளர் பாலில், இரண்டு டேபிள் ஸ்பூன் தேனுடன் சேர்த்து கலக்கவும். சுமார் ஒரு மாதம் வரையில் தினமும் மூன்று வேளை இவ்வாறு பருகி வரவும்.

Comment here