இந்தியா

மாநிலங்களவையில் இன்று முத்தலாக சட்ட மசோதா!

Rate this post

முத்தலாக் சட்டமசோதா திருத்தங்கள் செய்யப்பட்ட நிலையில் இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

முத்தலாக் சட்ட மசோதா முஸ்லீம் பெண்கள் உரிமை மற்றும் திருமண மசோதா என்ற பெயரில் நாடாளுமன்றத்தின் மக்களவையில் நிறைவேறிய பின்னரும் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படவில்லை. எதிர்க்கட்சியினரின் கடும் எதிர்ப்பு காரணமாக அந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கான பெரும்பான்மை பலம் பாஜக அரசுக்கு இல்லை. இந்நிலையில் இந்த மசோதாவில் சர்ச்சைக்குரிய சில அம்சங்களை நீக்கி விட்டு மத்திய அரசு திருத்தங்களை செய்துள்ளது. இந்த திருத்தங்களுக்கு பிரதமர் மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.

குறிப்பாக முத்தலாக் வழக்கில் கைது செய்யப்படும் நபர்களுக்கு ஜாமீன் கிடையாது என்ற விதிமுறை திருத்தம் செய்யப்பட்டு ஜாமீன் பெறலாம் என மாற்றப்பட்டுள்ளது.மும்முறை தலாக் கூறி மனைவியை விவாகரத்து கூறினால் மூன்றாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று இச்சட்டம் கூறுகிறது. இச்சட்ட மசோதாவில் மூன்று திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், விளக்கம் அளித்துள்ளார். மாநிலங்களவையின் அலுவல்களில் இன்று முத்தலாக் மசோதா இடம் பெற்றுள்ளது.

Comment here