மாநிலங்களவை தேர்தலில் நோட்டாவுக்குத் தடை _ உச்சநீதிமன்ற உத்தரவு

Rate this post

மாநிலங்களவை தேர்தலுக்கு நோட்டா பயன்படுத்த தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு

இந்திய தேர்தல் முறையில் எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பாத வாக்காளர்கள் ‘நோட்டா’ என்ற வாய்ப்பை கையாள அனுமதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு இந்த முறை கொண்டுவரப்பட்டது. நேரடியாக மக்கள் மூலமாக மாநில சட்டசபை உறுப்பினர்களை தேர்வு செய்யும் சட்டமன்ற தேர்தலிலும், பாராளுமன்ற மக்களவை உறுப்பினர்கள் சேர்ந்து வாக்களித்து பாராளுமன்ற மேல்சபையான மாநிலங்களவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதிலும் இதே நடைமுறை பின்பற்றப்படுகிறது.

இதை எதிர்த்து குஜராத் மாநில சட்டசபையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் கொறடா ஷைலேஷ் மனுபாய் பார்மர் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

மாநிலங்களவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்வு செய்ய வாக்களிக்கும்போது ‘நோட்டா’ முறையை பின்பற்றினால் குதிரை பேரத்துக்கும், ஊழலுக்கும் வசதியாகி விடும் என அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, தங்களது பிரதிநிதிகளை பொதுமக்கள் நேரடியாக தேர்ந்தெடுக்கும் தேர்தல்களில் பயன்படுத்த மட்டும்தான் நோட்டா அறிமுகப்படுத்தப்பட்டது. மாநிலங்களவை தேர்தலிலும் நோட்டாவை அனுமதித்தால் யாருக்கும் வாக்களிக்க வேண்டாம் என்பதை ஊக்குவிப்பதைப் போல் ஆகிவிடும் என சுட்டிக்காட்டியதுடன் இதுதொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கேட்டிருந்தது.

இதற்கு தேர்தல் ஆணையம் பதிலளித்திருந்தது. இதைதொடர்ந்து, இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், பாராளுமன்ற மேல்சபை தேர்தலில் நோட்டா முறையை தடை செய்து உத்தரவிட்டது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*