மாநில பாரா பேட்மின்டன் போட்டி கரூர் ரக்சனாவிற்கு இரண்டு தங்கம்

Rate this post

தமிழ்நாடு பாரா பேட்மின்டன் அசோசியேஷன் நடத்திய மாநில அளவிலான மகளிருக்கான பாரா பேட்மின்டன் போட்டிகள் அண்மையில் மதுரையில் நடைபெற்றது.
இதில் கரூர் பரணி வித்யாலயா பள்ளியைச் சேர்ந்த மாணவி S.ரக்சனா ஒற்றையர் மற்றும் இரட்டையர் ஆகிய இரண்டு பிரிவுகளிலும் மாநில அளவில் முதல் பரிசு பெற்று இரண்டு தங்கப்பதக்கங்களை வென்றார்.
மாநில அளவில் தங்கப்பதக்கங்களை வென்று சாதனை படைத்த மாணவி ரக்சனாவிற்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் பரணி பார்க் கல்வி குழும தாளாளர் S.மோகனரெங்கன், செயலாளர் திருமதி பத்மாவதி மோகனரெங்கன், முதன்மை முதல்வர் முனைவர் C.ராமசுப்பிரமணியன், பரணி வித்யாலயா முதல்வர் S.சுதாதேவி, நிர்வாக அலுவலர் M.சுரேஷ் மற்றும் இருபால் ஆசிரியர்கள் கலந்து கொண்டு மாணவியை பாராட்டி வாழ்த்தினர்.

மாணவி ரக்சனா கடந்த ஆண்டு தேசிய அளவில் நடைபெற்ற பாரா பேட்மின்டன் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்று மாண்புமிகு தமிழக ஆளுநர் திரு.பன்வாரிலால் புரோஹித் அவர்களால் பாராட்டப்பட்டார். மேலும் தேசிய தரவரிசை பட்டியலில் தொடர்ந்து முதல் மூன்று இடங்களுள் இடம் பெற்றும்  வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

புகைப்படம்: மாநில அளவில் தங்கப்பதக்கங்களை வென்று சாதனை படைத்த மாணவி ரக்சனா, பரணி பார்க் கல்வி குழும தாளாளர் S.மோகனரெங்கன், முதன்மை முதல்வர் முனைவர் C.ராமசுப்பிரமணியன்,பரணி வித்யாலயா முதல்வர் S.சுதாதேவி, மாணவியின் பெற்றோர் மற்றும் பயிற்சியாளர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*