தமிழகம்

மானியமில்லாத சமையல் கேஸ் சிலிண்டர் ரூ.42.50, மானியத்துடன் கேஸ் சிலிண்டர் ரூ.2.08 உயர்வு

Rate this post
புதுடெல்லி, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் சமையல் கேஸ் சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் மாற்றி அமைத்து வருகின்றன. அந்த வகையில் கேஸ் சந்தை விலை மீது விதிக்கப்பட்ட வரியின் விளைவால் தற்போது விலை  அதிகரித்து இருக்கிறது.
அதன்படி, 14.2 கிலோ எடை கொண்ட ஒரு சிலிண்டரின் விலை ரூ.2.08 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன் டெல்லியில் ரூ.493.53 பைசா இருந்த நிலையில், ரூ.495.61 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் கடந்த 3 மாதங்களாக ரூ.13.39 பைசா குறைக்கப்பட்டிருந்த நிலையில் இப்போது உயர்த்தப்பட்டுள்ளது.
இதேபோல, மானியம் இல்லாத சமையல் சிலிண்டர் விலை ரூ.42.50 பைசா அதிகரித்துள்ளது. இதனால், இனி மானியமில்லாத சிலிண்டர் விலை ரூ.701.50 பைசாவாக அதிகரிக்கும். இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
இதற்கு முன்பு, மானிய சிலிண்டர் விலை கடந்த ஆண்டு டிசம்பர் 1-ஆம் தேதி ரூ.6.52 பைசாவும், ஜனவரி 1-ஆம் தேதி ரூ.5.91 பைசாவும், பிப்ரவரி மாதம் ரூ.1.46 பைசாவும் குறைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
மானியமில்லாத சிலிண்டர் விலை கடந்த டிசம்பர் 1-ஆம் தேதி சிலிண்டருக்கு ரூ.133, ஜனவரி 1-ஆம் தேதி சிலிண்டருக்கு ரூ.120.50 குறைக்கப்பட்டது, கடந்த மாதம் ரூ.30 குறைக்கப்பட்டது.
சிலிண்டர் விலை உயர்ந்துள்ளதையடுத்து வங்கிக்கணக்கில் மானியத்தொகை பரிமாற்றத்தின் அளவும் அதிகரிக்கும். பிப்ரவரி மாதம் ரூ.165.47 பைசா வழங்கப்பட்டு வந்த நிலையில், இனி ரூ.205.89 பைசா டெபாசிட் செய்யப்படும்.

Comment here