விளையாட்டு

மாமியார் மரணம், இலங்கை திரும்புகிறார் மலிங்கா

வங்கதேசத்துக்கு எதிரான உலகக்கோப்பை போட்டி இன்று முடிந்தவுடன் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லஷித் மலிங்கா இலங்கை செல்கிறார். இங்கையில் மாமியார் இறுதிச் சடங்கை முடித்துக் கொண்டு மீண்டும் உலகக்கோப்பையில் விளையாட செல்கிறார். அவர் 15-ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் அணியுடன் இணைவார் என்று எதிர்பார்க்கிறோம் என இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. கார்டிப்பில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இலங்கையின் வெற்றிக்கு மலிங்கா முக்கிய பங்கு வகித்தார். இலங்கை அணி 3 போட்டிகளில் 3 புள்ளிகள் பெற்றுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம் மழையால் கைவிடப்படதால் தலா ஒரு புள்ளி இரு அணிகளுக்கும் வழங்கப்பட்டது. முன்னதாக நியூஸிலாந்துடன் இலங்கை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

Comment here