Sliderவரலாறு

மாயமான மாமன்னர் ராஜேந்திரரின் வெற்றித்தூண்கள்

ராஜேந்திர சோழனை கடாரம் கொண்டான் என்ற விருதினைக்கொண்டு அழைப்பக்த்தை அறிகிறோம் . ஆனால் 1918 வரை கடாரம்என்பது பர்மாவில்உள்ள பெகூவில்தான்
இருக்கிறது என்றுதான் வரலாறு நினை த்திருந்தது என்பது பலருக்கும்
தெரியுமா ? அத்தகைய நம்பிக்கைக்கு ஆதாரமாக அமைந்தது பர்மாவில் பெகூவில்க்கிடைத்த மாமன்னன் ராஜேந்திரர் அமைத்த இரண்டு
கருங்கல்லினால் ஆன ஆறுப்பட்டை கொண்ட வெற்றித்தூண்கள் .தான்
அது கண்டுபிடிக்கப்பட்டது 1908 க்கு முன் ,

அந்த வெற்றித்தூண்கள் அங்கே க் கண்டுபிடிக்கப்பட்டதும் , அந்த செய்தி வெளிவந்த அப்போதைய செய்தித்தாளின் பதிவை கீழேக்காணலாம் .
The Straits Times,14 January, 1909, page.6

அந்த வெற்றித்தூண்களை ஆராய்ந்த வரலாற்றாளர்கள் , அதில் இடம்பெற்றிருந்த கி பி 11 ஆம் நூற்றாண்டின் தமிழ் எழுத்தமைதிகொண்ட கல்வெட்டைக்கொண்டு இவை ராஜேந்திர சோழனுடையதுதான் என்ற முடிவுக்கு வந்தனர் .அந்த கல்வெட்டுகளை ஆராய்ந்த பர்மீய தொல்லியல் அதிகாரி டேசெஎஸ்க்கோ என்பவர் இவை ராஜேந்திர சோழனின் வெற்றித்தூண்கள்தான் என்று உறுதியா க கூறினார் அதை அப்போதைய
இந்திய தொல்லியல் துறை அறிக்கையிலும் வெளிவந்தது .அப்போது பர்மாவும் இந்தியாவும் ஒரே நாடாக இருந்தது .அப்படித்தான் ராஜேந்திர சோழனின் காலத்திலும் பர்மா சோழ நாட்டின் ஒரு பகுதியாக இருந்திருக்கிறது

archealogical report on Burma 1908 para 25

ஆனால் 1918 ஆம் ஆண்டு கோடஸ் .என்னும் வரலாற்றாளர் மலேயா தீபகற்பத்தில் உள்ள கெடா என்ற பகுதியே மாமன்னர் ராஜேந்திரன் வென்ற , கடாரம் என்றுக் கருதுவதாக அங்கககிடைத்த கல்வெட்டுகளை ஆய்ந்து தெரிவித்தார் . அப்போதைய சமகால வரலாற்று ஆர்வலர்களால் அது ஒப்புக்கொள்ளப்பட்டது .இதனால் பர்மாவின் பெகூவில் கிடைத்த வெற்றித்தூண்கள் முக்கியத்துவம் இழந்தது ,அதில் இருந்த தமிழ் கல்வெட்டுகள் பொய்யெனப்புறக்கணிக்கப்பட்டது .

இராஜராஜனின் ஆட்சியின் 14ஆவது ஆண்டுக் கல்வெட்டுகளில், முதல் முறையாக, கடல் கடந்து கடாரம் கொண்ட செய்தி காணப்படுகிறது. இதைத் தெரிவிக்கும் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் கடலைக் கடந்து திறமையான படையுடன் இராஜேந்திரன் சென்று கடாஹ என்னும் பகுதியைக் கைப்பற்றினான் என்று சுருக்கமாக ஒரு செய்யுளில் சில வரிகளில் கூறிமுடிக்கிறது என்றாலும் இந்தச் சாதனையை இவருடைய தமிழ் மெய்க்கீர்த்தி மிக விரிவாகச் சொல்கிறது.

கி.பி. 1025இல் சோழர்களின் கப்பற்படை சங்கராம விஜயோத்துங்கவர்மன் ஆண்ட ஸ்ரீவிஜய சாம்ராஜ்யத்தை நோக்கிய போரைத் தொடங்கியது. ஸ்ரீவிஜயத்தின் படைவலிமை பெற்ற கடாரத்தையும் தாக்கி அழித்தது சோழர்களின் கப்பற்படை. சங்கராம விஜயோத்துங்கவர்மன் சைலேந்திர குலமன்னனான மார விஜயதுங்கவர்மனின் மகனாவான். இந்த ஸ்ரீவிஜயம் தற்காலச் சுமத்ரா நாட்டின் தீவில் உள்ள பாலம்பங்கில் உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது.

அலைகடல் நடுவுட் பலகலஞ் செலுத்திச்
சங்கிராம விசையோத் துங்க வர்ம
னாகிய கடாரத் தரசனை வாகையும்
பொருகடல் கும்பக் கரியொடு மகப்படுத் என்கிறது மாமன்னர் ராஜேந்திரரின்
……….மெய்க்கீர்த்தியில்ஒரு பகுதி .

கடாரம்கொண்டான் என்றழைக்கப்பட்ட ராஜேந்திர சோழன் வென்ற கடாரம், மலேசியாவில் உள்ள பூஜாங் பள்ளத்தாக்கு பகுதி என மலேசிய வரலாற்று ஆர்வலர்கள் உறுதி செய்ததும் .பர்மிய வெற்றித்தூண்கள் முக்கியத்துவம் இழந்தது , அதில் இருந்த தமிழ் கல்வெட்டுகள் பொய்யெனப்புறக்கணிக்கப்பட்டது .ஆனால் ஏன் என்பதுதான் இன்னமும் மர்மமாக இருக்கிறது .
பர்மாவில் ராஜேந்திர சோழன் அடைந்த வெற்றி ஏன் மறைந்துபோனது ?

இந்தக் கட்டுரையின் நோக்கம் கடாரம் என்பது மலேசியாவில் உள்ள பூஜாங் பள்ளத்தாக்கு பகுதியா அல்லது பர்மாவில் பெகூவா என்பது குறித்து ஆய்வது அல்ல ! அதைவிட முக்கிய ஒரு தகவல் உள்ளது .

தென்னிந்திய வரலாற்று சங்கத்தின் 37 வைத்து மாநாடு சென்ற ஆண்டு சேலத்தில் மார்ச் 10 முதல் 12 வரை 2017 இல் நடைபெற்றபோது ஒரு ஆராய்ச்சிக்கட்டுரை அங்கே படிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது .

அப்போதுதான் இந்த அதிர்ச்சித்தகவல் வெளியானது .அதாவது பர்மாவில் கிடைத்த ராஜேந்திரனின் வெற்றித்தூண்களும் , மொரிஸியஸில் கிடைத்த வெற்றித்தூண்களும் , மலேசியாவில் கிடைத்த வெற்றித்தூண்களும் இப்போதுக்கானவில்லை என்பதுதான் .
அதன் ஆங்கில பதிவை ப்படியேத்தருகிறேன் .

The Victory Pillars of Rajendra Chola: Missing from Pegu (Myanmar), Kedah (Malaysia)

and Mauritius.

The Proceedings of the 37th session of South Indian History Congress held at the Periyar University, Salem from March 10th to 12th 2017

The Victory Pillars of Rajendra Chola: Missing from Pegu (Myanmar), Kedah (Malaysia) and Mauritius.
As for as Burma is concerned, the Jayastamba / Victory Pillars – two octagonal made of granite found at Pegu[1] / Burma erected by Rajendra Chola were reported in 1909. The Strait Times, a Singapore based nrewspaper reported as follows[2]: “Two Pillars of Victory, which were found outside the town-hall of Pegu, India, are to be erected on a masonry pedestal in front of the District Court. They are believed to have been erected inb 1025 and 1027 A. D. to commemorate the victory of Prince Rakendra Chola I, who overran Kidaram (Sanskrit, Kalaba), the ancient Falaing Kingdom of Ramananandam (Pegu)”. Taw Sein Ko (1864-1930), the Burmese first archaeologist noted[3] in 1913 about “…. a conspiracy of silence among native historians not to refer to anything relating to the invasion of their country by South Indians or other foreigners”.
—-blog of kvr

படங்கள்
The Straits Times, 14 January, 1909, page.6

இது குறித்து மேலும் தகவல்கள் திரட்டப்படவேண்டும்
நண்பர் Orissa balu வின் தீவிர முயற்சியால் இப்போது பர்மாவில் உள்ள வரலாற்றில் ஆர்வம் கொண்ட நண்பர்கள் பலர் அவரின் குழுவில் தொடர்பில் உள்ளனர் .அவர்கள் மூலமாக இன்னமும் அதிக தகவல் கிடைக்கலாம் என்ற நம்பிக்கையில் இதை இப்போது பதிவிடுகிறேன் இன்னமும் சில செய்திகள் உண்டு அதை அடுத்தப்பதிவில் போடுகிறேன் .
அண்ணாமலை சுகுமாரன்

Comment here