மாயூரம் வேதநாயகம் பிள்ளை

Rate this post

இன்று தமிழ்ப் புதின முன்னோடி மாயூரம் வேதநாயகம் பிள்ளை பிறந்த தினம். (அக்டோபர் 11, 1826)*

இவர் புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர். 1878 இல் இவர் எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம் என்னும் புதினம்தான் தமிழில் வெளியான முதல் புதினம் ஆகும். இவர் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள குளத்தூரில் பிறந்தார். தந்தையார் சவரிமுத்துப் பிள்ளை, தாயார் ஆரோக்கிய மரி அம்மையார். இவரின் பெற்றோர், திருச்சிராப்பள்ளியில் இருந்து மதுரைக்கு தொடர்வண்டியில் செல்கையில் குளத்தூர் தொடர்வண்டி நிலையத்தில் இவர் பிறந்தார். 1876-1888 ஆண்டுகளில் தமிழகத்தில் ஏற்பட்ட பஞ்சத்தின் போது தமது சொத்துக்கள் அனைத்தையும் கொடையளித்தார். இதனைப் போற்றும் விதமாக கோபாலகிருஷ்ண பாரதியார் நீயே புருஷ மேரு என்ற பாடலை எழுதினார். அந்தக் காலகட்டத்தில் 16 புத்தகங்கள் எழுதினார். தமிழின் முதல் புதினமான பிரதாப முதலியார் சரித்திரத்தையும் அப்போதே எழுதினார். வீணை இசைப்பதிலும் வல்லமை பெற்றிருந்தார். அவரது சமகாலத்தோரான தமிழறிஞர்கள் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, இராமலிங்க வள்ளலார், திருவாவடுதுறை மடத்தின் மகாசன்னிதானம் சுப்பிரமணிய தேசிகர், கோபாலகிருஷ்ண பாரதியார் ஆகியோருடன் நட்பு பாராட்டி நெருங்கியிருந்தார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*