இந்தியா

மிகுந்த பொருட்செலவில் நடைபெறப்போகும் 2019-ஆம் ஆண்டு 17-வது இந்திய பாராளுமன்ற தேர்தல்

Rate this post
புதுடெல்லி, 17-வது மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில்,  கிட்டத்தட்ட 1,866 அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும்  ஆயிரக்கணக்கான வேட்பாளர்களுக்கு 900 மில்லியன் மக்கள் வாக்களிக்க காத்து இருக்கின்றனர்.
தேர்தலில் தான் கணக்கில்வராத பணம், கணக்கில் வந்த பணம், கருப்பு பணம்,  சட்டத்திற்கு உட்பட்ட பணம், சட்டவிரோதமான பணம் என பணம் வாரி இறைக்கப்படும்.
கடந்த 2014-ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் 35 ஆயிரம் கோடி செலவு செய்யப்பட்டதாக டெல்லியை சேர்ந்த ஆராய்ச்சி நிறுவனமான ஊடக ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
தேர்தலுக்கு உத்தியோகபூர்வ மதிப்பீடு ரூ.7,000-8,000 கோடி மட்டுமே இருந்த போதிலும், மீதமுள்ள 27,000 கோடி ரூபாய் கணக்கில் வராத பணமாக இருப்பதாக ஆய்வு தெரிவிக்கிறது.
வரும் பாராளுமன்ற தேர்தலில் ரூ.50 ஆயிரம் கோடி முதல் ரூ.60 ஆயிரம் கோடி வரை செலவிடப்படும் என இந்த ஆராய்ச்சி மையம் மதிப்பிட்டு உள்ளது.
2014-ஆம் ஆண்டு தேர்தலில் 533 பெரிய பாராளுமன்ற தொகுதிகளுக்கு  வேட்பாளர் ஒருவர் ரூ.70 லட்சமும், சிறிய பாராளுமன்ற தொகுதிகளுக்கு ரூ.54 லட்சமும் செலவிடலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது.
வேட்பாளர்கள் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ள வாக்குமூலத்தின் படி சராசரியாக ஒரு வேட்பாளர் ரூ.25 லட்சம் மட்டுமே செலவு செய்ததாக கூறி உள்ளார். ஆணையம் குறிப்பிட்ட தொகையை விட இது குறைவாக உள்ளது. 2014 தேர்தல்களில் வேட்பாளர்களின் செலவினம், தேர்தல் ஆணையம் நிர்ணயித்திருந்த தொகுப்பில் 58 சதவீதமாக இருந்தது.
அறிவிக்கபட்ட தொகையை விட 10 எம்.பி.க்கள் அதிகமாக செலவு செய்ததாக குறிப்பிட்டு உள்ளனர். பாரதீய ஜனதாவில் 4 எம்பிக்களும், திரிணாமுல் காங்கிரசில் 2 எம்பிக்களும், காங்கிரஸ், இந்தியதேசிய வாத காங்கிரஸ், யூனியன் முஸ்லீம் லீக், அதிமுக ஆகிய கட்சியில் தலா ஒரு எம்பிக்களும் அதிகமாக செலவு செய்ததாக குறிப்பிட்டு உள்ளனர்.

Comment here