வானிலை

மின்னல்

மின்னலின் வகைகள்
இடி,மின்னல்

1.மேகத்திற்கு உள்ளே உண்டாகும் மின்னல்
ஒரே மேகத்திற்குள் உள்ள நேர்மின் அயனி மற்றும் எதிர்மின் அயனி கவர்தலினால் மின்னல் ஏற்படலாம். இதனை மேகத்திற்கு உள்ளே உண்டாகும் மின்னல் என்கிறோம்.

2.வெவ்வேறு மேகத்திற்கு இடையே ஏற்படும் மின்னல்
ஒரு மேகத்தில் உள்ள நேர்மின்அயனி அருகில் இருக்கும் மற்றொரு மேகத்தின் எதிர்மின் அயனியை கவர்தலினால் ஏற்படும் மின்னல் வெவ்வேறு மேகத்திற்கு இடையே ஏற்படும் மின்னல் என்கிறோம்.

3.மேகத்திற்கும், பூமிக்கும் இடையே ஏற்படும் மின்னல்
மேகத்தின் அடிப்பகுதியில் இருக்கும் எதிர்மின் அயனியானது புவியில் இருக்கும் நேர்மின் அயனியை கவர்ந்திழுக்கும்போது ஏற்படும் மின்னல் மேகத்திற்கும், பூமிக்கும் இடையே ஏற்படும் மின்னல் ஆகும்.

இதுவே மிகவும் ஆபத்தானது. இவ்வகை மின்னலே பூமியில் இருக்கும் மரம், கட்டிடம் உட்பட்ட உயரமான பொருட்களை அழிக்கிறது. சில நேரங்களில் மனிதனையும் தாக்குகிறது.

மின்னலின் நிறம்
மின்னல் பெரும்பாலும் நீலம் கலந்த வெள்ளை நிறத்தில் இருக்கும். மின்னலின்போது உருவாகும் வெப்பமானது சுற்றிலும் இருக்கும் காற்றினை சூடாக்குவதால் காற்றுத் துகள்கள் வெள்ளை நிறத்தை உமிழுகின்றன.

அதே நேரத்தில் காற்றில் உள்ள நைட்ரஜன் வாயுவானது நீலநிறத்தை உமிழச் செய்கிறது. எனவேதான் மின்னல் உருவாகும்போது நீலம் கலந்த வெள்ளையாகத் தோன்றுகிறது.

சிலநேரங்களில் சுற்றுப்புறத்தைப் பொறுத்தும் மின்னல் மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறத்தில் தோன்றக்கூடும்.

இடி உருவாகும் விதம்
மின்னல் நிகழும்போது உண்டாகும் அதிகப்படியான வெப்பமானது சுற்றிலும் இருக்கும் காற்றினை சூடாக்குகிறது. இது சூரியனின் மேற்பரப்பு வெப்பத்தைப் போன்று ஆறுமடங்கு இருக்கிறது.

சூடான காற்றானது உடனடியாகக் குளிரும்போது உண்டாகும் ஆற்றல் மாற்றமானது அதிர்வாக (ஒலியாக) வெளிப்படுகிறது. இதனையே இடி என்கிறோம்.

இயற்கையின் நிகழ்வான இடி மின்னல் பற்றிய மேலும் தகவல்களை அடுத்த பதிவில் விரிவாகப் பார்ப்போம்.

Comment here