மிமிக்ரி கலைஞர் ராக்கெட் ராமநாதன் மரணம் : ஏராளமானோர் அஞ்சலி

Rate this post

தமிழகத்தில் புகழ் பெற்று விளங்கிய பல குரல் மன்னன் ராக்கெட் ராமநாதன் இன்று அதிகாலை மரணம் அடைந்தார்.

தமிழகத்தில் புகழ் பெற்ற பல குரல் மன்னர்களில் முக்கியமானவர் ராக்கெட் நாமநாதன். தமிழில் மிகிக்ரி செய்யும் வெகுசிலரில் முக்கியமானவராக வலம் வந்தவர். ஒரு காலத்தில், தமிழ் சினிமாவில் பிரபலமான நபராக இருந்தார். இந்த நிலையில் பலகுரல் மன்னனும் நகைச்சுவை நடிகருமான ராக்கெட் ராமநாதன் காலமானார்(74). இவர், ஒரு புல்லாங்குழல் அடுப்பு ஊதுகிறது, ஸ்பரிசம், வளர்த்தகடா, மண்சோறு, கோயில்யானை, நாம், வரம் உட்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தமிழக அரசின் கலைமாமணி, நடிகர் சங்கத்தின் கலைச்செல்வம் விருதுகள் பெற்றவர். சென்னை ராயப்பேட்டையில் இன்று மாலை 4.30 மணியளவில் நல்லடக்கம் நடைபெற உள்ளதையடுத்து, பலர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*