உலகம்

மிஸ் ஆஸ்திரேலியா பட்டத்தை வென்ற இந்தியப் பெண்

மெல்போர்னில் நேற்றிரவு நடந்த அழகிப்போட்டியில் இந்தியப் பெண் பிரியா மிஸ் ஆஸ்திரேலியா 2019ஆக மகுடம் சூட்டப்பட்டார். விரைவில் நடைபெற உள்ள மிஸ்யுனிவர்ஸ் அழகி போட்டிக்கு ஆஸ்திரேலியாவின் சார்பாக பங்கேற்க உள்ளார். போட்டியில் வென்றது தொடர்பாக பேசிய பிரியா, எனக்கு இது முதல் அழகிப் போட்டியாகும். இதற்கு முன்னதாக எந்த ஒரு போட்டியிலும் கலந்தது கிடையாது. மாடலிங் செய்தது கிடையாது. நான் அனுபவத்தின் ஒரு பகுதியாக இருக்க விரும்பினேன். போட்டியில் வென்று மிஸ் ஆஸ்திரேலியா பட்டம் வென்றது பெரிய ஆச்சரியம் அளிக்கிறது,” எனக் கூறியுள்ளார். சட்டம் படித்துள்ள பிரியா மெல்போர்னில் மாநில அரசு ஒன்றில் வேலை வழங்கும் துறையில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

Comment here