பொது

முகநூல் உதவியால் குடும்பத்துடன் இணைந்த 8 வருடங்களுக்கு முன் காணாமல் போன சிறுவன்

Rate this post

தெலுங்கானாவில் வசித்து வந்த சிறுவன் கடந்த 2011ம் ஆண்டு ஜனவரி 26ந்தேதி யாரிடமும் கூறாமல் வீட்டில் இருந்து வெளியே சென்றான்.  அதன்பின் அவனை காணவில்லை.  அவனது தாயார் போலீசாரிடம் புகார் தெரிவித்து உள்ளார்.  ஆனால் சிறுவனை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

அதேவேளையில், கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்டில் முகநூல் பக்கத்தில் தினேஷ் ஜெனா லிமா என்ற பெயரில் தனது மகனின் புகைப்படத்தினை கண்டார்.  இதனால் ஆச்சரியமடைந்து போலீசில் புதிய புகார் ஒன்று தெரிவித்து உள்ளார்.
இந்த விவகாரத்தினை சைபர் கிரைம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.  இதில் பஞ்சாபின் அமிர்தசரஸ் மாவட்டத்தில் ரனகலா கிராமத்தில் சிறுவன் இருப்பது தெரிய வந்தது.  இதனை தொடர்ந்து போலீசார் குழு ஒன்று பஞ்சாப் சென்றது.  அங்கு நிலபிரபு ஒருவரின் பாதுகாப்பில் இருந்த சிறுவனை அழைத்து வந்து குடும்பத்தினரிடம் மீண்டும் சேர்த்தனர்.

Comment here